கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம், என்பவற்றுடன் போரதீவுப்பற்று
பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய முது கலைஞர்களின் பல்சுவை கலை நிகழ்ச்சி வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (03) நடைபெற்றது.
இதன்போது போரதீவுப்பற்று பிரதேச முது கலைஞர்களின் நாட்டார் கவி, கொஞ்சம் சிரிங்க காசிய சித்திரம், இளையோருக்குச் சொல்வோம், கூத்தும் மரபுத் தாளமும், இருகரையும் வேளாண்மையும் நாடகம், போன்ற பல நிகழ்வுகள் அரங்கேறின.
மேலும் இந்நிகழ்வில் பற்குபற்றிய முது கலைஞர்களுக்கு பரிலில்களும் வழங்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இப்பிரதேச முது கலைஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment