21 Nov 2016

சிறுபான்மை சமூகத்துக்கு உண்மையான அரசியல் அதிகாரத்தை கொடுக்கின்ற மனப்பாங்கு மத்திய அரசுக்கு இருக்கின்றதா? ஹபிஸ் நஸீர் கேள்வி

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

சிறுபான்மை சமூகத்துக்கு உண்மையான அரசியல் அதிகாரத்தை கொடுக்கின்ற மனப்பாங்கு மத்திய அரசுக்கு இருக்கின்றதா? எனக் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபிஸ் நஸீர் கேள்வி எழுப்பினார்.
மருதமுனை ஏ.ஆர் அப்துல் சத்தார் எழுதிய மருதாபுரி - சரித்திர நாவல் நூல் வெளியீட்டு விழா மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் (19.11.2016) மாலை நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். முதலமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்;

கிழக்கு மாகாணத்தில் இன்று ஒவ்வொரு விடயங்களுக்கும் திட்டமிட்டு அபிவிருத்தி வேலைகளை செய்து கொண்டிருக்கின்றோம். மறுபுறம் மக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை செய்து வருகிறோம்.

மாகாணத்துக்கு புதிய முதலீடுகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, புதிய தொழில்நுட்பம், விற்பனை, உற்பத்தி, எமது பொருளாதார வளங்கள் பற்றியும் பல திட்டங்களை வெற்றிகாணும் அளவுக்கு செயற்படுத்தி வருகின்றோம்.

ஆயிரம் பிரச்சினைகள் எங்கள் தோழிகளில் சுமத்தப்பட்டுள்ளது. கல்வித் துறையில் 1134 பட்டதாரிகள் விரைவில் நியமிக்கவுள்ளோம். ஆதாரபூர்வமாக பிரச்ச்னைகளை ஆவணப்படுத்தியிருக்கிறோம்.

அரசியல் யாப்பு திருத்தம் வருகின்ற போது சிறுபான்மை சமூகத்தின் அரசியல் தீர்வை தருவதற்கு மத்திய அரசு ஏதோ ஒரு சாட்டுப் போக்கை கூறிக் கொண்டிருக்கின்ற யதார்தத்தை புரிந்து கொண்டு தமிழ், முஸ்லிம் சமூகத்தின் குறிப்பாக தமிழ் தே.கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிறசினதும் அரசியல் ஒற்றுமை அதிகப்படியான அதிகாரத்தை பெறுவதற்கான ஒரு வழியாக இருக்கும்.

இந்த நாட்டிலே எவ்வாறான அரசியல் தீர்வு பேசப்பட்டாலும் சிறுபான்மை சமூகத்துக்கு உண்மையான அரசியல் அதிகாரத்தை கொடுக்கின்ற மனப்பாங்கு மாத்திய அரசுக்கு இருக்கிறதா? என்பது எனக்குள்ள கேள்வி.
என்னுடைய அரசியல் அனுபவத்தில் எவ்வாறு இந்த அதிகாரத்தை கொடுக்காமல் தடுக்கலாம் என பல சக்திகள் ஒவ்வொரு காலமும் குழப்பிய வரலாறு இந்த நாட்டில் உள்ளது. 

இருந்த போதும் நடக்கின்ற ஒவ்வொரு விடயங்களும் சரியாக நடப்பது போன்ற நாடக அரசியலையும் சொல்லாமல் இருக்க முடியாது என்றார்.







SHARE

Author: verified_user

0 Comments: