ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவிலடங்கும் தெரிவு செய்யப்பட்ட உப உணவுப் பயிர்ச் செய்கையிலீபடும் விவசாயிகளுக்கு சனிக்கிழமை
(ஒக்ரோபெர் 05, 2016) விவசாய விரிவாக்கத்துக்கான உபகரணங்களும் உள்ளீடுகளும் வழங்கப்பட்டதாக ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவு விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வீட்டுத் தோட்டச் செய்கையிலீடுபடும் தெரிவு செய்யப்பட்ட 5 விவசாயிகளுக்கு தலா 5445 ரூபாய் பெறுமதியான பீடை நாசினித் தெளி கருவிகளும், மேலும் 7 விவசாயிகளுக்கு தலா 1875 ரூபாய் பெறுமதியான நீர்க்குழாய்களும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான போட்டோ கொப்பி இயந்திரம் இளைஞர் விவசாய கழகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment