6 Nov 2016

இந்திய - இலங்கை வர்த்தகத் தொழிற்துறை அபிவிருத்தி அங்குரார்பண நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் சனிக்கிழமை(05) மாலை அங்குரார்பணம்

SHARE
இந்திய - இலங்கை வர்த்தகத் தொழிற்துறை அபிவிருத்தி அங்குரார்பண நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் சனிக்கிழமை(05) மாலை அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
முன்னாள் இந்திய மத்திய அரசின் அமைச்சரும் இந்து -ஸ்ரீலங்கா சேம்பர் அமைப்பின் இணைத்தலைவருமான கே.கிருஷ்ண குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இந்தியாவில் இருந்து பெரும் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்
இன் நிகழ்வின் நோக்கமாக கிழக்கு மாகாணத்தில் சகல துறையையும் மேம்படுத்தல் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குதல் அதிலும் சுற்றுலாத்துறை, பண்ணை வளர்ப்பு, மீன் வளப்பு, ஏற்றுமதி இறக்குமதி செய்தல் அத்துடன் தகவல் தொழில் நுட்பம் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு இதன்மூலம் பலருக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வதுடன் மாகாணத்துக்கும் பெரும் முதலீட்டையும் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளல் என்பன இதன் முக்கிய அம்சமாகும்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இந்திய உயர் ஸ்தானிகர் வை.சின்ஹா மற்றும் அமைச்சர்களான சரத் அமுனுகம, ரவூப் ஹக்கீம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் இந்து -ஸ்ரீலங்கா வர்த்தக தொழில் நுற்ப அபிவிருத்தி மையத்தின் துணைத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்,  ஆகீயோர் கலந்து கொண்டதுடன் இவர்களுடன் இவ்வமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரி பி.கே.லும்பா , நரேஸ் பானா ஆகியோருடன் அதிதிகள் தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது










SHARE

Author: verified_user

0 Comments: