20 Nov 2016

யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் ஆதரவு வழங்குவேன் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாண் இராசமாணிக்கம்.

SHARE
அரசியலுக்காக பேச்சில் மட்டும் கொள்கையை வைத்திருப்பதை விட, ஜனாதிபதியாக எவர் வந்தாலும் அவருக்கு ஆதரவு வழங்குவதனூடாக எமது மக்களுக்கான எமது அபிவிருத்திகளை ஏற்படுத்த முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் தெரிவித்துள்ளார். 
'இந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரான சாண் இராசமாணிக்கத்துக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு இணைத்தலைமை பதவி கொடுத்திருக்கின்றார்கள். அவருக்கு கொள்கையில்லாமல் செயற்படுபவர் என மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்த கருத்துக்கு பதில் வழங்கும் போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் அவர்  தெரிவிக்கையில், என்னை இந்நாட்டின் ஜனாதிபதி பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் பதவியையும், பட்டிருப்புத்தொகுதியில் இருக்கும் பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்தி இணைத்தலைமைப் பதவியினையும் அளித்துள்ளார் என்றால் என்னை மக்கள் தான் நிராகரித்திருக்கின்றார்களே தவிர ஜனாதிபதி நிராகரிக்கவில்லை. என்னை எனது கட்சித்தலைவர் இணைத்தலைவர் பதவிக்கு நியமித்ததை போன்று தம்pழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவர்களையும் பிரதேச ரீதியாக நியமித்திருக்கலாம். நான் மட்டுமே கடந்த போரதீவுப்பற்று ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற இடத்தில் தமிழனாக இருந்தேன். மற்றைய தமிழ் தலைவர்கள் அக்கூட்டத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை. நான் தமிழ் மக்களின் அபிவிருத்திகள் வருவதை மறுப்பதற்கு அந்த இடத்தில் இருக்கவில்லை. தமிழ் மக்களின் அபிவிருத்திகளை நோக்காகக் கொண்டே அரசியலுக்குள் வந்தவன்.  

நான் அரசியலுக்காக மட்டும் நான் கொள்கையுடையவன் அல்ல. அரசியலுக்காக ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு வெறுமனே பேச்சில் மட்டும் கொள்கையை வைத்திருப்பதை விட யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவருக்கு ஆதரவு வழங்குவதனூடாக எமது மக்களுக்கான அபிவிருத்திகளினை கொண்டு வருவதாகும்.   நான் என்னுடைய சுயலாபத்திற்காக அரசியலுக்குள் வந்தவன் இல்லை. கிழக்கு மாகாண தமிழ் மக்களின் அபிவிருத்திகளை நோக்காக கொண்டவன். என தெரிவித்தார். 

தமிழ் மக்களின் அபிவிருத்திக்காக மாத்திரமே நான் அரசாங்க தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றேன். நான் கொள்கைகளுக்காக மாத்திரம் அரசியல் செய்வதாக இருந்தால் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசாவுக்கு முன்னரே நான் கூட்டமைப்பில் அங்கம் வகித்து தேர்தலில் போட்டியிட்டிருப்பேன். 2013ம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக ஒதுக்கப்பட்ட நிதியில் அதிகளாவான நிதி காத்தான்குடியின் அபிவிருத்திக்கு செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த சகோதர இனங்களை முன்னுதாரணமாக கொண்டு நாம் செயற்படவேண்டியவர்களாக இருக்கின்றோம். இங்கு உள்ளவர்கள் கொள்கையை பற்றி கதைப்பவர்களாக இருந்தால் வடக்கு மாகாண தமிழ் அரசியல் வாதிகளைப் போன்று மக்களுக்கு அபிவிருத்தி செய்து விட்டு கொள்iயை கதைத்தால் ஏற்றுக்கொள்ளலாம். இங்குள்ளவர்களுக்கு கொள்கையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை. இவ்வாறு உள்ளவர் விரைவில் மக்களால் நிராகரிக்கப்படுவார் எனவும் தெரிவித்தார்.   

SHARE

Author: verified_user

0 Comments: