19 Nov 2016

ஊடகவியலர் காலமானார்

SHARE

(டிலா )

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப பொருளாளரும் ஊடகவியலாளருமான எச். எம். பாயிஸ் (வயது 55) நேற்று இரவூ (18) காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஆங்கில மொழி மூலம் வெளிவந்த “இஸ்லாமிக் பேர்ஸ்பெக்டிவ்” என்ற  சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான இவர் , கொழும்பு ஸாஹிர கல்லூரியின் பழைய மாணவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை முதுமானி பட்டதாரியூம் ஆவார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்டகால பொருளாளராக கடமையாற்றிய இவர் போரத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளத்தின் நிர்வாக செயலாளராக சேவையாற்றிய இவர் சிறந்த ஒரு சமூக செயற்பாட்டாளராவார்.

கொழும்பு கொம்பனித் தெருவைச் சேர்ந்த இவர் ரிஸ்னாவின் கனவரும், அஷ்பாக், அஷ்கா,அர்ஷாக் ஆகிய மூன்று பிள்ளைகளின் தந்தையூம் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா கொழும்பு 9 தெமட்டகொட,இலக்கம் டி 1/1, மல்லிகாராம தொடர்மாடி வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு இன்று சனிக்கிழமை (19) மாலை 3.00 மணிக்கு குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

முஸ்லிம் மீடியா போரத்தின் வளர்ச்சிக்காக மிக நீண்ட காலமாக நேரடியாகவூம் பின்னணியில் இருந்தும் செயற்பட்டு வந்த அன்னாரது மறைவூ போரத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என்று போரத்தின் தலைவர் என். எம். அமீன் தனது அனுதாபத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தகவல் :
என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹான்
பொதுச் செயலாளர்
0773112561 / 0718030818

SHARE

Author: verified_user

0 Comments: