கிழக்கு மாகாணத்திற்கான தமிழ்த் தேசிய மாணவர் பேரவையின் புதிய நிர்வாக கட்டமைப்பு தெரிவு ஞாயிற்றுக் கிழமை (13) மாலை மட்டக்களப்பு - குருமண்வெளி மீள் எழுச்சி மண்டபத்தில் தமிழ்த் தேசிய மாணவர் பேரவையின் ஸ்தாபக தலைவரும் யாழ் பல்கழைக்கழக சட்ட பீட மாணவனுமான ஆறுமுகம் யோன்சன் தலைமையில் நடைபெற்றது.
“கல்வியே மிகப்பெரிய ஆயுதம் அதனை எந்த அளவிற்கு பயன்படுத்துகின்றோமோ அந்த அளவிற்கு உலகில் மாற்றங்களைக் கொண்டு வரலாம்" "மாணவர் சக்தியே மாபெரும் சக்தி" எனும் எண்ணக் கருவினை மையப்படுத்தி கிழக்கு மாகாண மாணவர்களிடையே கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பல்கழைக்கழக மாணவர்கள் கல்வியலாளர்கள் மாணவர்ள் பலர் ஒன்றிணைந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் இவ் அமைப்பு உருவாக்கப்பட்டு யாழ் பல்கழைக்கழக கலைப்பீட மாணவன் பூ.வசந்தன் தலைமையில் இவ் அமைப்பு வட மாகாணத்தில் செயற்பட்டு வருவதுடன் அதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாணத்தில் இவ் அமைப்பின் தற்காலிக நிர்வாக கட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் புதிய தலைவராக மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் ஆங்கில ஆசிரியர் சி.கோகுல்றாஞ் அவர்களும் செயலாளராக சப்புரகமுவ பல்கழைகழக கலைப்பீட மாணவன் செ.டிலோஜன் அவர்களும் பொருளாளராக கிழக்கு பல்கழைக்கழக கலைப்பீட மாணவன் வே.லோகுசன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் 11 நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தும் முகமாக கிழக்கிலுள்ள பல்கழைக்கழக மாணவர்கள் கல்வியலாளர்களுடன் ஒன்றிணைந்து இவ் அமைப்பு செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment