18 Nov 2016

மட்டக்களப்பில் தொடர் மழை

SHARE
வட கீழ் பருவப் பெயற்சி மழை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக் கிழமை (17) காலை முதல் பவலாக பலத்த மழை பெய்து வருகின்றது. 
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

இந்நிலையில் மட்டக்களப்பு நகரில் 19.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 66.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 37.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாவில் 18.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 41.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சையில் 42.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரியில் 28.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவு பகுதியில் 41.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமத்தில் 83.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: