(துறையூர் தாஸன்)
இதய உயிராபத்து நிலையிலுள்ள நோயாளர்களை அதிலிருந்து விடுபடுவதற்கான, இதய சுவாசமீள் உயிர்ப்பித்தல் முகாமைத்துவம் சம்பந்தமான பயிற்சிப் பட்டறை கல்முனை
வடக்கு ஆதாரவைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில், வைத்திய அத்தியட்சகரின் ஆலோசணையுடனும், மயக்கமருந்து வைத்தியநிபுணர் டாக்டர் வீ.எஸ்.தேவகுமார் தலைமையிலும் நடைபெற்றது.
யாழ் பல்கலைக் கழகமருத்துவபீட வெளிநாட்டிலுள்ள பழையமாணவர் சங்க ஒன்றியத்தின், ஐக்கிய இராச்சியக் கிளையினால் ஒழுங்குசெய்யப்பட்ட இப் பயிற்சிப் பட்டறை நிகழ்வானது முழு நாள் நிகழ்வாக அமைந்திருந்தது.
பொதுச்சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் எம்.வேற்பிள்ளை, நுண் உயிரியல் வைத்திய நிபுணி.திருமதி.வேற்பிள்ளை, மயக்கவியல் மருத்துவ நிபுணர் ஸ்ரீலோகராஜா, பொதுவைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.சிவகுமார், முதிராக் குழந்தைவைத்திய நிபுணர் தர்ஸினிசாந்தலிங்கம் ஆகியோர்களால் இப்பயிற்சிப் பட்டறை முழுமையாக செயற்பாடுடன் கூடிய செயலமர்வாகவே நடாத்தப்பட்டது.
சடுதியாக நபரொருவருக்கு ஏதேனும் காரணங்களால், இதயம் மற்றும் சுவாசம் நிறுத்தப்படும் போது அந்நபர்களும், வைத்தியசாலை வைத்திய மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் போன்றோர் எவ்;வாறு சுவாசத்தை மீள் உயிர்ப்பிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும் எனும் பயிற்சியும் மற்றும் முதிராக் குழந்தைகளின் பிரச்சினைகளை எவ்வாறான வகையில் கையாளலாம் என்பனபற்றிய செயற்பாட்டு விளக்கமும் அளிக்கப்பட்டதுடன் பங்குப ற்றியவர்களும் செயற்பாடு சார்ந்து இப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இப் பயிற்சிப் பட்டறையில் திருக்கோயில் ஆதாரவைத்தியசாலை, அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலை, சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலை, அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலை, கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலை போன்றவைத்தியசாலைகளின் வைத்திய உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட 85 பேர் இதன் போதுகலந்து கொண்டனர்.
இமன்போது போதியளவு விளக்கத்தை வழங்கியதுடன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றியவர்கள் தங்களது கருத்துக்களையும் முன் வைத்தனர். நிறைவாகபயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment