இலங்கையின் நிரந்தர அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 2030 (இரண்டாயிரத்து முப்பது) நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஆராய்வதற்கான
14 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் கிழக்கு மாகாணத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இக்குழுவிற்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமை தாங்குகின்றார்.
அதன் முதலாவது கூட்டத் தொடர் வியாழக்கிழமை (24.11.2016) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம் பெறுகிறது.
இக்குழுவில் வடமாகாணத்திலிருந்து இ. சரவணபவன், மலையகம் சார்பாக வி.எஸ் இராதாகிருஷ்ணன் போன்றோரும் இடம் பெறுகின்றனர்.
காமினி ஜெயவிக்கிரம பெரேரா, நிரோஷன் பெரேரோ, ருவான் விஜயவர்த்தன, சுமித்தா ஜெயசேன, அனுராதா ஜெயரத்ன, விமல் ரத்னாயக்க, அப்துல்லாஹ் மஹ்ரூப், புத்திக்க பத்திரன, ரமேஷ் பத்திரன, நலிந்த ஜெதிஸ்ஸ, றோஹினி குமார விஜயவர்த்தன ஆகியோர் தெரிவுக் குழுவில் உள்ள ஏனைய நாடாளுமன்ற உறப்பினர்களாவர்.
0 Comments:
Post a Comment