மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்டபத்தடிக் கிராமத்தில் இருந்து இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சித்திபெற்றுள்ளனர்.
இரு சகோதரிகளின் பிள்ளைகளான வன்னியசாமி கிருபாகரன் (பிரதி அதிபர்-மட்.மமே.கரையாக்கந்தீவு கணேசா வித்தியாலயம்) மற்றும் திருமதி உமாபதி விவேகானந்தன் (ஆசிரியர்-மட்.மமே.மண்டபத்தடி அ.த.க.பாடசாலை) ஆகிய இருவருமே அவ்வாறு சித்திபெற்று குடும்பத்திற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவ் இருவரும் அண்மையில் நடைபெற்ற அதிபர் தரம் 111 போட்டிப் பரிட்சையிலும் சித்திபெற்று அதிபர்களுக்கான பயிற்சியினையும் முடித்த நிலையிலே இலங்கை கல்வி நிருவாக சேவை பரிட்சையிலும் சித்திபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னியசாமி கிருபாகரன் மண்டபத்தடியைச் சேர்ந்த வன்னியசாமி மணியம்மா தம்பதியினரின் புதல்வாரன இவர் மட்.மமே.கன்னன்குடா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஆவார்.
திருமதி உமாபதி விவேகானந்தம் மண்டபத்தடியைச் சேர்ந்த தவராசா வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியாகிய இவர் மட்.மமே.கன்னன்குடா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஆவார்.
0 Comments:
Post a Comment