சர்வோத நிறுவனத்தின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி.ஆரியரத்னாவின் 85வது பிறந்த தினமான சனிக்கிழமை (நொவெம்பெர் 05, 2016) அன்று மட்டக்களப்பு
சர்வோதய மாவட்டப் பயிற்சிப் பாடசாலை சத்துருக்கொண்டானில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சர்வோதய நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஈ.எல்.அப்துல் கரீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் 85 பேர் இரத்த தானம் செய்தனர்.
மேலும் 85 செவ்விளநீர் தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், சிரமதானம் மற்றும் பல் சமய பிராரர்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன்.
அம்பாறை மாவட்டம் இங்கினியாகல பொல்வத்தையிலிருந்து செவ்விளநீர் தென்னங் கன்றுகள் எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் சமயப் பிரார்த்தனைகளுடன் நாட்டப்பட்டன.
இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணானாயக்க உட்பட தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த பல் சமய மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
கலாநிதி ஆரியரத்தன 1958 ஆம் ஆண்டு சர்வோதய இயக்கத்தை நிறுவி சுமார் 60 வருடங்கள் அந்த இயக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதோடு இலங்கை அரசியல் சாசன உறுப்பினர்களில் ஒருவராகவுமுள்ளார்.
தேசோதய, சாந்தி சேனா இளைஞர் அமைப்பு, சர்வோதய சிறுவர் அமைப்பு, சர்வோதய மகளிர் அமைப்பு, சர்வோதய பொருளாதார அபிவிருத்தி அமைப்பு, சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனி போன்றவை சர்வோதய நிறுவனத்தின் ஏனைய கிளை அமைப்புக்களாகும்.
நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் சர்வோதய நிறுவனத்தின் மாவட்டப் பயிற்சி நிலையங்கள் உள்ளன.
சர்வோதய நிறுவனம் அதன் ஆரம்ப காலம் தொட்டு கல்வி, சுகாதார, சமூக, பொருளாதார, அரசியல் விழிப்புணர்வுகளிலும் வீடமைப்பு, வாழ்வாதாரம், தொழிற்பயிற்சி, சகவாழ்வு, சூழல் சுற்றாடல் இயற்கை வளப் பாதுகாப்பு, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வந்திருக்கின்றது.
0 Comments:
Post a Comment