25 Oct 2016

பெரும்பான்மைஇன தீவிரவாதக் குழுக்கள் சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வு வரக் கூடாது எனசெயற்படுகின்றார்கள் - கிழக்கு முதலமைச்சர் ஆவேசம்

SHARE
சிறுபான்மை மக்கள் பல உயிர்களை இழந்தும் அவர்களுக்காக ஒரு அரசியல் தீர்வு வரக்கூடாது என்ற நோக்குடன் பெரும்பான்மை இனத்திலே உள்ள சில தீவிரவாதக் குழுக்கள செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.  
இவ்வாறானவற்கைத் தகர்த்தெறிந்து ஒரு தீர்வைக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்நாட்டிலே உள்ள அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது.

என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திங்கட் கிழமை (24) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள மாவட்ட கிராமிய தொழிற்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மலரும் கிழக்கு என்ற தொழிற் கண்காட்சியில் கலந்து கொண்டு காட்சிக் கூடங்களைத் திறந்து வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

வெளிநாடுகளுக்குச் செல்கின்ற கூலித்தொழிலாளர்களாலும், வீட்டுப் பணிப் பெண்களாலும் கிடைக்கும் வருமானம் மட்டும்தான் இந்த நாட்டுக்குக் கிடைக்கின்றது. எனவே இந்த நிலமையை மாற்றி கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு வீடும் தொழிற்சாலைகளாக மாற வேண்டிய தேவை இருக்கின்றது. எம்மைப் பாத்திக்காத தொழில் நுட்பத்தைக் கொண்டு வரவேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. தகவல் தொழில் நுட்பத்திலே இலங்கை 20 வருடங்கள் பின்நோக்கி நிற்கின்றது. வேர்ட், எக்ஸல், வைபர், போஸ்புக், வட்ஸப் போன்றவற்கைப் பயன்படுத்தினால் தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம் என நினைத்துக் கொண்டிருக்கின்றது இந்நாடு.

சென்னையில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கின்ற நிறுவனங்களிலே 2000 டொலர்ஸ் சம்பளம் பெறுகின்ற நிலமை ஏற்பட்டிருக்கின்றது. தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை  அமைந்துள்ளார்கள். அது போன்ற நிலமை எமது நாட்டிலும் ஏற்பட வேண்டும். எனவே இவைகளனைத்திற்கும் இந்த நாட்டு அரசாங்கத்தினுடைய கொள்கை மற்றும் செயற்றிட்டம் போன்றன மாற்றப்பட வேண்டும். வெளிநாடுகளிலுள்ள வைத்திய நிபுணர்கள், தகவல் தொழில் நுட்பட விற்பனர்கள் இங்கு வந்து கடமை புரிய முடியாதுள்ளது. வெளி நாட்டிலுள்ள வைத்தியவர்கள் மணிக்கணக்கில் நோயபளிகளை பரிசோதனைகளை மேற்கொள்கின்றார்கள் மாறாக நம்நாட்டில் வைத்தியர்கள் வைத்திய சேவையை வியாபாரமாகவே பார்க்கின்றார்கள்.

எனவே அரசியல் தீர்வுக்கு முட்டுக்கட்டை போடுகின்றது போல் எந்தவொரு திட்டத்தையும் அமுல் படுத்த முடியாத, நாட்டினுடைய வளர்ச்சிக்கும் தீவிரவாத முட்டுக்கட்டை போடுகின்ற நிலமைதான் இந்த நாட்டிலே காணப்படுகின்றது. ஏனையவர்கள் வாழாவிட்டால் பரவாயில்லை நாங்கள் மாத்திரம் வாழ்ந்தால் போதும் என்கின்ற நிலமைதான் இந்த நாட்டிலே காணப்படுகின்றது. எனவே இவற்றில் மாற்றம் கொண்டுவர வண்டும் இதற்காக வேண்டி கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆகக் குறைந்தது மாதாந்தம் ஐம்பத்தினாயிரம் ரூபாய் சம்பளம் பெறுவதற்கான வழிவகைகளை  ஏற்படுத்த வேண்டும் இதற்கான வழிவகைகளை நாம் தற்பொது ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

கிழக்கிலுள்ள வழங்கள் வீணடிக்கப்படுகின்ற வேளையில் அவற்றை சரியாகப் பயன்படுத்தி முயாக நன்மையடை அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். கிழக்கிலுள்ள அனைத்து வளங்களையும் சரியான முறையில் பயன்படுத்தினால் எமது மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கூலியாட்களாகவும், வீட்டுப்பணிப் பெண்களாகவும், சென்று கஸ்ற்றப்பட வேண்டிய நிலமை ஏற்படாது. எனவே கிழக்கை ஒரு வளமுள்ள பிரதேசமாக மாற்றவேண்டும்.

சிறுபான்மை மக்கள் பல உயிர்களை இழந்தும் அவர்களுக்காக ஒரு அரசியல் தீர்வு வரக்கூடாது என்ற நோக்குடன் பெரும்பான்மை இனத்திலே உள்ள சில தீவிரவாதக் குழுக்கள செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.  இவ்வாறானவற்கைத் தகர்த்தெறிந்து ஒரு தீர்வைக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்நாட்டிலே உள்ள அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது.

தமிழ் முஸ்லிம் மக்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. இவ்வேளையில் நாம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே ஒற்றுமையுடன் வேறுபாடு காட்டாது செயற்பட வேண்டும் கிழக்கு மாகாண சபையில் உண்மையாக நல்லாட்சி நடைபெறுகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

























SHARE

Author: verified_user

0 Comments: