26 Oct 2016

கச்சக்கொடி சுவாமிமலை மக்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டம்.

SHARE
(பழுகாமம் நிருபர்)

மட்டக்களப்பின் எல்லைப்புற கிராமமான பட்டிப்பளை பிரதெச செயலகத்திற்கு உட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் நேற்று (25) வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இக்கிராம மக்கள் அடிப்படை வசதிகளான குடிநீர், போக்குவரத்து, மின்சாரம் போன்ற பிரச்சினைகள் இருப்பதாகவும், காட்டுயானைகளின் அட்காசம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் அக்கிரா மக்கள் தெரிவித்தமையினை இட்டு எதிர்வரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி இவற்றை நிவர்த்தி செய்வதாகவும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்தார். 

இங்கு 65 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான வாழ்வாதார உதவித்திட்டமான கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன. எதிர்வரும் காலங்களில் இதனை செவ்வனவே செய்தால் இவர்களுக்கான மேலதிக உதவிகள் அனைத்தையும் செய்து தருவேன் என்றும் தெரிவித்தார். 









SHARE

Author: verified_user

0 Comments: