30 Oct 2016

தேசியமட்ட வீரர்களை தங்கத்தால் அலங்கரித்த களுதாவளை மக்கள்

SHARE
பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மட்.களுதாவளை மகாவித்தியாலய மாணவன் ஜெயரெட்ணம் ரிசானன் என்ற மாணவன் பரிதி வட்டம் வீசுதலில் முதலாம் இடத்தையும், குண்டு போடுதலில் முதலாம் இடத்தையும், பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களையும், கே.சந்திரகுமார் என்ற மாணவன் கோலூன்றிப் பாய்தலில் வர்ண சான்றிதழையும் பெற்று பாடசாலைக்கும்,
மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்தமைக்காக கௌரவிக்கும் நிகழ்வு, களுதாவளை கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (29) மாலை நடைபெற்றது.

கடந்த மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரை கண்டி போகம்பறை மைதானத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான  இத்தேசிய விளையாட்டுப் போட்டியில் 15 வயதிற்குட்பட் போட்டியில் கலந்து கொண்ட ஜெயரெட்ணம் ரிசானன் 13.70 மீற்றர் தூரம் குண்டெறிந்து முதலாம் இடத்தையும், 46.56 மீற்றர் பரிதி வட்டம் வீசி முதலாம் இடத்தையும் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார். 

இந்நிலையில் 17 வயதிற்குட்பட் போட்டியில் கலந்து கொண்ட கே.சந்திரகுமார் 3.10 மீற்றர் கோலூன்றிப் பாய்ந்து 7 ஆம் இடத்தைப் பெற்று வர்ண சான்றிதழைப் பெற்றுக் கொணடார்.

இந்நிலையில் தேசியமட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் கலந்து கொண்ட மட்.களுதாவளை மகாவித்தியாலய கனிஸ்ட பிரிவு மாணவிகள் குழு நடனத்தில் முதலாம் இடத்தைப் பெற்று ஜனாதிபதியிடமிருந்தும் விதுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மட்.களுதாவளை மகாவித்தியாலயத்திற்கு தேசியமட்டத்தில் முதலிடத்தைப் பெற்று பெருமை சேர்த்த இம்மாணவர்களைக் கௌரவிக்கும் விழாவை களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயமும், கெனடி விளையாட்டுக் கழகம், பொதுமக்களின் ஆதரவுடன் இணைந்து சனிக்கிழமை (29) மாலை களுதாவளை கலாசார மண்டபத்தில் நடாத்தியிருந்தது.

இதன்போது தங்கப் பதக்கம் வென்ற ரினானனுக்கு தங்கமாலையும், வர்ணசான்றிதழ் பெற்ற மாணவனுக்கு தங்க மோதிரமும் பணப்பரிவும், ஞாபகச் சின்னமும், வழங்கி பொன்னாடை போர்தி கொரவிக்கப்பட்டனர். இந்நிலையில் தேசியமட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பணப்பரிசு வழங்கப்பட்டதோடு, இவர்கள் அனைவரையும் பயிற்றுவித்த ஆசியரியர்களும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ரிசானன் மற்றும் சந்திரகுமாருக்கும், அவர்களைப் பயிற்று வித்த ஆசிரியர்களுக்கும், பொன்னாடை போர்தி மாணவர்களுக்கு பணப்பரிசும் வழங்கி கௌரவித்தனர்.

இதேவைளை இவ்விரு மாணவர்களின் பல்கலைக் கழகம் வரையிலான கற்றல் செலவுகள் அனைத்தையும் தாம் பெறுப்புற்பதாக இதில் கலந்து கொண்ட இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். 

இந்நிலையில் இதில் கலந்து கொண்ட விருட்சம் சமூக மேம்பாட்டு அமைப்பு ரிசானனுக்கு 10000 ரூபாவும், சந்திரகுமாருக்கு 5000 ரூபாவையும் வழங்கி பாராட்டியதோடு தொடர்ந்து வரும் வருடங்களில் இம்மாணவர்களின் விளையாட்டு பயிற்சிக்குரிய செலவுகள் அனைத்தையும் பொறுப்பேற்பதாகத் தெரிவித்தனர்.

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தலைவர் கா.வ.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை,  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மூ.கோபாலரெத்தினம், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
















































SHARE

Author: verified_user

0 Comments: