30 Oct 2016

உலகில் மாற்றத்தைக் காண்பதற்காக இலக்கு வைக்கப்படுவோர் இளைஞர் அணிதான்- கிழக்குப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் துறைத் தலைவர். எம்.ரி.எம். றிஷ்வி

SHARE
உலகில் மாற்றத்தைக் காணும் பணிக்காக இளைஞர் அணியைத்தான் செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கின்றனர் என கிழக்குப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான (Senior Lecturer Head Islamic Studies Eastern University Sri Lanka எம்.ரி.எம். றிஷ்வி தெரிவித்தார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இளைஞர் முகாம் ஏறாவூர் றஹ{மானியா வித்தியாலயத்தில் ஞாயிறன்று (ஒக்ரோபெர் 30, 2016) இடம்பெற்றது.

அங்கு மென் திறன் விருத்தி (ளுழகவ ளுமடைடள) பற்றிய செயலமர்வை நடத்திய அவர் மேலும் கூறியதாவது@ இளமை என்பது சகலரும் விரும்பும் ஓர் பருவம். சூடேற்றப்பட்ட இரத்தமாகவும், வலிமையின் துடிப்பாகவும், புத்தம் புதியவற்றை கவர்ந்து கொள்ளும் ஆற்றலுக்குப் பெயர் போன ஒரு பொருள் மாதிரி இளமைக்குப் பல பெயர்கள் உண்டு.

யௌவனம்; என்பது முயற்சி செய்து அடைய வேண்டிய ஒன்று என மனதில் பட்டது நல்லதோ, கெட்டதோ உயிரை கொடுத்தேனும் அதை அடைந்திட நினைக்கும் ஒரு சக்திமிக்கதுதான் இளமை.

இன்றைய இளைஞர் யுவதிகள் நன்மையின் மொத்த உருவமாக அல்லது தீமையின் மொத்த வடிவமாக இருப்பதுதான் இளையவர்களை இலக்கு வைப்போருக்கு இனிப்பான செய்தியாக இருக்கின்றது.

இக்காலத்தில் பரவிவரும் ஒழுக்கக் கேடுகளை மற்றவர்களை விட சீக்கிரம் ஏற்றுக்கொண்டு செயலாற்றுகின்ற ஒரு தரப்பாக இமைளஞர் சமுதாயம் உள்ளது.
அதேவேளை ஒழுக்கக் கேடுகளை பரப்புவதிலும் மூத்தவர்களை விட இளையவர்களே முதன்மை வகிக்கின்றனர்.

தீமை  புரிவோர்களுக்கு அதிக ஊக்கத்தை கொடுப்போராகவும் இளையோர் திகழ்கின்றனர்.

போதைப் பொருள் பாவனை குடும்பத்துடன் பாடசாலையுடன் நிருவாகத்துடன் முரண்படுதல், நடத்தைப் பிறழ்வுகள், மனவெழுச்சிப் பிரச்சினைகள், சீர் கெட்ட காதல் விவகாரம், பாலியல் முறைகேடு,  விபச்சாரம்   வன்முறைக்குணம் உள்ளிட்ட இன்ன பிற பிரச்சினைகளுடன் குற்றச்செயல்கள் புரிவோரில் ஆர்வமுடையோராகவும் இளைஞர்கள் உள்ளார்கள்.

ஆகையினால்தான் உலகில் எதையெதையெல்லாம் அறிமுகம் செய்ய நினைக்கின்றார்களோ அதற்கு ஏற்ற கருவியாக உலகம் இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றது.

அந்த அறிமுகம் சினிமாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் ஊடாக இளைஞர் சமூகத்தைக் குறி வைத்து அனுப்பப்படும். 

சமூகத்தில் இளைஞர்கள்தான் மிக முக்கியமானவர்கள் என்பதால் மேற்குலகம் இளைஞர்களைக் கொண்டுதான் இந்த உலகத்தை வழிநடாத்துகின்றது.
அதேவேளை, இந்த உலகத்தில் நன்மைகளுக்காக  பங்காற்றுகின்றவர்கள் என்கின்ற சிறப்பான செயற்பாடுகளையும் உலகில் ஒரு பகுதி இளைஞர்கள் தன்னகத்தே கொண்டுள்ளார்கள். அதுதான் இளைஞர் சமூகம் பற்றிய ஒரு சிறப்பான செய்தியாகவும் நிம்மதியை அளிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது” என்றார்.





SHARE

Author: verified_user

0 Comments: