30 Oct 2016

ஆசிரியர் வெற்றிடங்களைப் பூர்திசெய்வதற்காக நடாத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சை பாடத்திட்டத்திற்கு அமைவாக நடைபெறவில்லை.

SHARE
கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் காணப்படும் தகவல் தொழில்நுட்பம், ஆரம்பக் கல்வி, சித்திரம், சங்கீதம், நடனம், நாடகமும்
அரங்கமும், பௌத்த நாகரீகம் விவசாயம், சிங்களம், உடற்கல்வி, வரலாறும் குடியுரிமைக் கல்வியும், இரண்டாம் மொழி சிங்களம் மற்றும் இரண்டாம் மொழி தமிழ் போன்ற பாடங்களுக்கh ஆசிரியர்  வெற்றிடங்களை நிரப்புவதற்காக கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக் குழுவினால் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் நோக்குடன் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

இப் பரீட்சையில் பல      குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் இதனால் அனேகமான பட்டதாரpகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அறிய கிடைக்கின்றது. எனவே மேற்படி பட்டதாரிகள் நலன் கருதி இக்குளறுபடிகளை ஆராய்ந்து அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் ஞாயிற்றுக் கிழமை (30) மேலும் கருத்து தெரிவித்த அவர்.

இப்பரீட்சை வினாபத்திரம் விண்னப்பதாரிகளுக்கு வழங்கப்பட்ட பாட திட்ட அறிவுறுத்தலுக்கு அப்பால் கல்வி மற்றும் கல்வி கற்பித்தல் சம்மந்தமாக ஓரிரு வினாக்கள் தவிர ஏனையவை இத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட வினாக்களாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் தெரிவிக்கப்பட்ட விதியில் பல்தேர்வு மற்றும் சுருக்க வினாக்கள் என்ற விதி மாற்றமடைந்து பல்தேர்வு வினாக்கள் இல்லாமல் தனியே சுருக்க விடை வழங்கும் வினாக்களாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பம் கோரலில்  குறித்த  அட்டவனை 1இல் குறித்த பாடங்களுக்கு தனித்தனி விண்ணப்பம் அணுப்பப்படல் வேண்டுமென்றும் ஆனால் ஒவ்வொறு பாடத்திற்கும் தனித்தனியே பரீட்சை கட்டணங்களும் செலுத்த வேண்டும் என்று நிபந்தனையிடப்பட்டுள்ளது.

ஆனால் இப்பரீட்சை கட்டணம் ஒரு பரீட்சார்த்தி நான்கு விண்ணப்பம் அனுப்பினாலும் ஒரு பரீட்சைதான் எழுதுகின்றார். ஆனால் அப்  பரீட்சார்த்தி ஒரு பரீட்சைக்கு ஏன் அவ்வாறு தனித்தனியே பணம் செலுத்த வேண்டுமென்ற நிபந்தனை ஏன் விதிக்கப்பட்டதோ என்பது புரியாத புதிராகதென்படுகின்றது. எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இப்பரீட்சை தெடர்பான பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த வியாழக்கிழமை (27) நடைபெற்ற கிழக்கு மாகாணசபை அமர்வின்போது அவசர பிரேரணை ஒன்றையும் முன் வைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.



SHARE

Author: verified_user

0 Comments: