16 Oct 2016

நாம் நீந்தி வந்த நெருப்பாறு நம் பிள்ளைகளுக்கு தெரியக் கூடாது

SHARE
நாங்கள் நீந்தி வந்த நெருப்பாறு இந்த பிள்ளைகளுக்கு தெரியக் கூடாது அவர்கள் இந்த நாட்டிலே சமாதானமாக வாழ வேண்டும் என்றால் இந்த நாட்டிலே இப்பொழுது ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் யாப்பு சரியான முறையிலே உருவாக்கப்பட வேண்டும்.
அரசியல் யாப்பு சரியாக உருவாக்கப்பட வேண்டுமென்றால் தமிழ் மக்களின் விடையங்கள் ஒரேய குரலிலே சென்றடைய வேண்டும் ஒரேய குரலே நமக்கு இப்போது தேவையானது என கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

கமத்தொழில் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பு மண்டூர் கமநல சேவைகள் நிலையத்தில் மண்டூர் கமநல சேவைகள் உத்தியோகஸ்தர் கோ.ஜெயகாந்தன் தலைமையில் சனிக்கிழமை (14) நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் மற்றும் சிறப்பு அதிதியாக மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கமநல அபிவிருத்தி பிரதி திணைக்கள ஆணையாளர் என்.சிவலிங்கம் மற்றும் பாடசாலை மாணவர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் என பலரும் ஆகியோர் கலந்து கொண்டதுடன் விவசாய அமைப்புகளுக்கு நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் புலமைப் பரிசில் பரீட்சையில் 154 புள்ளிகளை பெற்ற மாணவியும் இந் நிகழ்வில் பாராட்டி பணப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் மகாண சபை உறுப்பினர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வின் போது தொடர்ந்து உரையாற்றிய விவசாய அமைச்சர் அதிகாரிகளுக்கிடையேயும் அதிகாரங்களுக்கிடையும்  போட்டித் தன்மை வழக்கமாக காணப்படுவதாகவும் அவை ஆரோக்கியமானதாக அமையும் போது அபிவிருத்திக்கு பயன்படுவதாகவும் அவ்வாறு இல்லாத போது அவ் அவிருத்தி தடைப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் மத்திய மாகாண நிர்வாகங்கள் இணைந்து ஆரோக்கியமான திட்டங்களை செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நேற்றைய தினம் பத்திரிகையினைப் பார்க்கும் போது அங்கே ஒருங்கமைப்பு ஒன்றியத்தினை சேர்ந்த பெங்கமுவே நாலக்க தேரர்  என்பவர் சொல்லுகிறார் என்னவென்றால் அவருடைய மகாநாயக்கதேரர்கள் இந்த நாட்டினைப் பற்றி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் வெளிநாட்டு தூதுவர்கள் வருகின்ற போது ஒரு நல்லாட்சி அதாவது எல்லா சமூகங்களையும் ஒன்றிணைக்க கூடிய ஒரு நடைமுறை ஒன்று மெல்ல மெல்ல நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார்கள் இது பொய் அங்கே எழுக தமிழ் ஒன்று ஏற்பட்டிருக்கிறது அதேய போன்று தென்னிலங்கையில் இன்னொரு எழுக சிங்கள என்ற நிலமை ஒன்று ஏற்பட இருக்கிறது இந்த நிலமையினை அந்த பெரிய புத்த தலைவர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார் என குறிப்பிட்ட அவர் இப்போது இருக்கின்ற இந்த நிலமையினை குழப்புவதற்கு அவர்கள் எத்தனித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

அனுராதபுரத்தில் தேவநம்பியதிஸ்ஸ புரத்தில் உள்ள நீராவியடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சென்ற குண்டர்கள் அங்கிருந்த ஒருவரை வாளால் வெட்டியதுடன் ஆலயத்தின் நாகதம்பிரான் சிலையினையும் உடைத்திருக்கிறார்கள் இந்த செய்திகளெல்லாம் யாழ்ப்பாணத்திலே நடந்த அந்த நிகழ்வுக்கு பிறகு வருகின்ற செய்திகளாக இருக்கின்றன

அமைதியான நேரத்திலே அதனை குழப்புவதற்கு ஒரு கல்லெறித்தால் போதும் அங்கு பெரிய கலவரமே எடுக்கும் அமைதியைக் குழப்புவதென்பது இலகுவான விடையம் ஒரு கல்லெறிந்தால் போதும் அந்த அமைதியினைக் குழப்புவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்பதற்காகத் தான் எமது தலைமைத்துவம் இந்த காலத்தினை மிகவும் பக்குவமாகவும் நிதானமாகவும் பயன்படுத்த வேண்டும்.


இப்போது  இருக்கின்ற இந்த சமாதான நிலமை நீடிக்கவேண்டும் இது நீடிப்பது பற்றி பெற்றோர்கள் நீங்கள் சிந்தியுங்கள் பிள்ளைகள் நீங்கள் உங்களுக்குள்ளே இருக்கின்ற கல்வியை எப்படி கல்லி எழுப்ப வேண்டுமென சிந்தியுங்கள் நாங்கள் எல்லாம் உங்களைப்பற்றி சிந்தித்து செயல்படுவோம் என குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: