ஏறாவூர் நகரில் அமைந்திருக்கும் பழைய பொதுச் சந்தையை சுமார் 19.3 கோடி ரூபாய் செலவில் அடுத்த வருடம் மே மாதமளவில் நவீன மயப்படுத்திக் கட்டி முடிப்பதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
முதலமைச்சின் செயலாளர் யூ.எல். அப்துல் அஸீஸ் தலைமையில் ஏறாவூர் நகர சபையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையளார் கே. சித்திரவேல், மாகாண சபை சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான அனீப் லெப்பை, ஆற்றங்கரை முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாயல், மற்றும் ஓட்டுப்பள்ளி மீரா ஜும்மாப் பள்ளிவாயல் ஆகியவற்றின் நம்பிக்கையாளர் சபையினரும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
ஏறாவூர் நகர பொதுச் சந்தை அமைந்துள்ள காணி மேற்படி இரு பள்ளிவாசல்களுக்கும் சொந்தமானது என்பதால் அதனை நவீன சந்தையாக நிருமாணிக்கும் பொருட்டு ஏறாவூர் நகர சபைக்கும் மள்ளிவாசல் நிருவாகத்தினருக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஏறாவூர் நகரத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த பொதுச் சந்தையைப் பயன்படுத்துவதோடு மேலும் தூர இடங்களிலிருந்து வருகை தருவோரும் இச்சந்தையைப் பயன்படுத்துவதால் இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக இட முக்கியத்துவம் மிக்க சந்தைகளில் ஒன்றாகவும் இது விளங்குகின்றது.
0 Comments:
Post a Comment