ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை (22.10.2016) ஏறாவூர் அல்
அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
“ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்” என்ற புனித அல்குர் ஆனின் போதனைக்கிணங்க இரத்த தானம் செய்யும் மகோன்னத கடமையை வலியுறுத்தி இந்த இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ள இரத்தான நிகழ்வில் இரத்ததானம் செய்ய விரும்பும் ஆண்களும் பெண்களும் இன மத மொழி பேதமின்றி இந்த இடத்திற்கு வருகை தந்து குருதிக் கொடையளிக்கலாம் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
மனிதம் பேணும் இந்த மகத்தான பணிக்கு அனைவரும் அன்போடு அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment