20 Oct 2016

கிழக்கு மாகாண ஆளுனர் மாகாண சபைக்கு தடையாக இருக்கிறார் கிழக்கு மாகாண சபையில் ஏன் சேர்ந்தோம் என தழிழ்தேசியக் கூட்டமைப்பு நினைக்கிறது

SHARE
எமது மாகாணத்திலுள்ள நடைமுறைகளை நடத்துகின்ற ஒரு சபைதான் மாகாணசபை அதனை மேற்பார்வை செய்கின்ற பொறுப்புத்தான் ஆளுனருக்கு இருக்கிறது ஆனால் ஆளுனர் அரசாங்கத்தின் பிரதிநிதியாக உண்மையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருக்கின்றவர் சில சில விடையங்களில் சில தலையீடுகளச் செய்வதாக எமது அமைச்சர்கள் எங்களிடம் சொல்லுகிறார்கள் நாங்கள் அவர்களிடம் சொல்லுகிறோம் ஏன் நாங்கள் கேட்பதை நீங்கள் தரவில்லை நாங்களும் இந்த ஆட்சியில் இருக்கிறோம் நல்லாட்சியைக் கொண்டு வந்தோம் எமது மக்களுக்கு நல்லாட்சியின் பலன் கிடைக்க வேண்டும் நாங்கள் குறிப்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் எதிர் கட்சியில் இருந்து எமது உரிமைக்காக போராடிய கட்சி இந்த கிழக்கு மாகாண சபையில் சேர்ந்ததன் நோக்கம் எமது அடிப்படைப் பிரச்சனைகள் எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டும் அதனூடாக எமது மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற அடிப்படையில் தான் நாங்கள் இந்த அரசில் சேர்ந்தோம் அனால் இப்பொழுது நாங்கள் யோசிக்கிறோம் ஏன் இந்த அரசில் சேர்ந்தோம் என்று நினைப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார். களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார் 

தொடர்ந்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் உண்மையில் அர்த்தமுள்ள மாகாண சபையின் அதிகாரம் சரியாக நடக்குமாக இருந்தால் எமது மக்களுக்காக ஒரு சில தேவைகளை நிறைவேற்ற வேண்டி வழி ஏற்படும் ஆனால் பேச்சுவாயிலிலும் புத்தமாகவும் வடித்திருக்கிறார்கள் செயற்பாட்டு வடிவில் அதனை செயற்படுத்துவதற்கு பல தடைகள் எமக்கு இருக்கிறது. 

மத்திய அரசு நிதிகளைக் குறைத்துக் கொண்டு வருகிறது மாகாணத்திலுள்ள ஆளுனர் அவர்கள் எங்களை அடைக்கப் பார்க்கிறார் இப்படித் தான் எமது மாகாண சபை இருக்கிறது ஆகவே எமது பிரச்சனைகளுக்கு இந்த மாகாண சபையில் சுதந்திரமாக இருப்பதற்கு இந்த நல்லாட்சி அதனை அனுமதிக்க வேண்டும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா என அவர் மேலும் தெரிவித்தார்.  
SHARE

Author: verified_user

0 Comments: