20 Oct 2016

பழுகாமம் பிரதேசத்தில் 2 ஏக்கர் கண்ணாக் காடு எரிந்து நாசம்.

SHARE
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் செவ்வாய்க் கிழமை (18) மாலை வேளையில் கண்ணாபற்றைகளில் தீவிபத்துஏற்பட்டது. 
இந்தனை உடன் இத்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் கட்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் பற்றிமேலும் தெரியவருவதாவது…

செவ்வாய்க் கிழமை (18) மாலை வேளை பழுகாமம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள  கண்ணாப் பற்றைகாட்டில் திடீரென தீபரவியது. இதனைகட்டுப் படுத்த மக்கள் பல முயற்சித்தும் அவை பலனளிக்கவில்லை.  இதனால் சுமார் 2 ஏக்கர் அளவிலானகண்ணாக் காடுகள் எரிந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

அதனைத் தொடர்ந்துசம்பவ இடத்திற்கு விரைந்தகளுவாஞ்சிகுடி பொலிஸாரும் பிரதேசமக்களும் இணைந்து அத்தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.  இச்சம்பவத்தினை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு தொலைபேசி; (0652222275) மூலம் பிரதேச மக்கள் தொடர்பு கொண்டபோது அவர்களால் வரமுடியாது என மறுத்துவிட்டனர். 

மீண்டும் தொடர்பு கொண்டபோது மட்டு தீயணைப்பு அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி எண்ணினை (0652222222) கொடுத்துள்ளார்கள். 

அவர்களிடம் தொடர்புகொண்டபோது அவர்களும் பழுகாமம் மட்டக்களப்பில் இருந்து தூரமாகவுள்ளது. வரமுடியாது என மறுத்துவிட்டதுடன் கல்முனைஅருகில் உள்ளதுஅவர்களுடன் தொடர்பகொள்ளுங்கள் எனதெரிவித்தனர். 

அவர்களிடம் கல்முனை தீயணைப்பு அலுவலகத்தின் தொலைபேசி இலக்கம் கூட இருக்கவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உரித்தான தீயணைப்புப் பிரிவினர் மாவட்டத்திற்குள் நிகழும் சம்பவத்திற்கு வரமறுத்தால் அவர்களின் கடமை என்ன என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் 

மீண்டும் பொரதீவுப்பற்று பிரதேசசெயலாளரிடம் இது தொடர்பாக அறிவித்தபோது அவரும் பலமுயற்சிகளை மேற்கொண்டதன் பிரதிபலனாக களுவாஞ்சிகுடி பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து தீயினைகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 








SHARE

Author: verified_user

0 Comments: