29 Oct 2016

மனிதாபிமானம் இவை இல்லாமல் சென்றதனால்தான் மக்களிடையே சமாதானமற்று, உடன்பாடற்று, குழப்பமான சூழல் ஏற்பட்டது

SHARE
மனித நாகரியத்தின் அடிப்படைத்தத்துவம் மனிதநேயம், மனிதாபிமானம் இவை இல்லாமல் சென்றதனால்தான் மக்களிடையே சமாதானமற்று, உடன்பாடற்று, குழப்பமான சூழல் ஏற்பட்டது.  அவலங்கள் பலவற்றை எமது மக்கள் அனுபவித்தனர். இதனால் பலர் உடல்
அங்கங்களை இழந்திருக்கின்றனர், அனாதைகளாக்கப்பட்டுள்ளனர், விதவைகளாக்கப்பட்டுள்ளனர். நான் மருத்துவ சேவையில் இருந்தவன் என்ற வகையில் ஒரு உயிர் துடிதுடித்து மரணத்து போகும் அவலம் எனக்கு நன்கு தெரியும். அவ்வாறான அவலங்கள் நிறைந்த சூழலை இறைவன் மீண்டும் வழங்க கூடாது. குறிப்பாக பட்டிப்பளைப்பிரதேசத்து மக்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது வாழ்வாதாரத்தினை, கல்வியினை உயர்த்தும் பொருட்டு மனிதநேய காப்பம் மொழி, மதம், இனம், அரசியல் போன்றவற்றை கடந்து செயற்படுகின்றது. என மனித நேய காப்பகத்தின் தலைவர் வைத்தியர். பன்னீர்ச்செல்வம் குறிப்பிட்டார்.

பட்டிப்பளையில் அமைக்கப்பட்டுள்ள மனிதநேயக் காப்பகத்தின் கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை (28) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்டு உடல் அங்கங்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றவர்களுக்கும், கல்வியை தொடரமுடியாத நிலையில் உள்ளவர்களுக்கும், அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் உதவிகள்  இதன் போது வழங்கி வைக்கப்பட்டது


பிரதேசத்தில் இனங்காணப்பட்ட 25பேருக்கு மானியமானமுறையிலும் பத்துபேருக்கு கடனடிப்படையிலும் நிதி உதவிகள்வழங்கப்பட்டனஇந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சமூகசேவை உத்தியோகத்தர், மனிதநேய காப்பகத்தின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: