29 Oct 2016

வெளிமாகாணத்தில் ஆசிரியர் நியமனம் பெற்ற பட்டதாரிகளின் நியமனம் மூலப்பிரதியை இன்றும் நாளையும் உடனடியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாரின் அலுவகத்தில் சமர்ப்பிக்கவும்

SHARE
(வ.ராஜ்குமார்)

வெளிமாகாணத்தில்  ஆசிரியர் நியமனம் பெற்ற பட்டதாரிகளின் நியமனம் மூலப்பிரதியை இன்றும் நாளையும் உடனடியாக   கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாரின் அலுவகத்தில் சமர்ப்பிக்கவும்
பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களின் போது கிழக்கு மாகாணத்தைச் செர்ந்த 215 அசிரியர்கள் வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் நியமனம் கிழக்கு மாகாணத்திற்கே வழங்க அரசாங்கம் சம்மதித்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

எனவே இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் 29 ,30 ஆகிய தினங்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் நியமனத்தின் மூலப்பிரதி குறித்த வெளி மாகாணத்தில் தாம் கடமையை பொறுப்பேற்க வில்லை என்ற கடிதம் மற்றும்  அடையாளஅட்டை போன்றவற்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுக்கின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: