16 Oct 2016

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களின் உயிரை காப்பாற்றியவர்கள் நாங்கள்! கி.மா.உறுப்பினர் கருணாகரம்

SHARE

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களின் உயிரை காப்பாற்றியவர்கள் நாங்கள்! எமது மக்களுக்கு நன்றிகடனுடன்செயற்ப்பட வேண்டும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்தார்க
ளுவாஞ்சிகுடி பொதச் சந்தைக் கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை நகரசபையாக மாற்றப்பட வேண்டும் இதனை நான் மகாண சபையில் தனிநபர் பிரேரணையாக கொண்டு சென்றுள்ளேன். இதனை கிழக்கு மகாண சபையானது ஏகமனதாக ஏற்றுக் கொண்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தள்ளப்பட்ட நிலையில் இரண்டு பிரதேச சபைகள் காணப்படுகின்றது இதன் பிரகாரம் களுவாஞ்சிகுடி பிரதேச சபையும் ஒன்று, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையத்தில் அமைந்துள்ளது. இதனை முதலமைச்சர் அவரது காலத்துக்குள் நகரசபையாக மற்றித்தர வேண்டும்.  

யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு கல்வியை இடைநடுவில் விட்டு தற்போது நிற்கதியாக நிற்கின்ற இளைஞர்,யுவதிகள் வாழ்கின்ற பிரதேச மாக இப் பட்டிருப்பு தொகுதி காணபடபடுவதால் இங்கு அனேகமானவர்கள் தொழில் வாய்பின்றி காணப்படுகின்றர் இதனை நிவர்த்தி செய்ய ஒரு ஆடைத் தொழிற்சாலை ஒன்றையும் அமைத்து தரவேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்மைப்புடன் இணைந்தெ கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு இருக்கின்றது நாங்கள் உங்களை முதலைமைச்சராக ஏற்று செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். இந்தநாட்டில் பத்து ஆண்டுகளுக்கு மெலாக கொடங்கோல் ஆட்சி நடைபெற்றது இக் காலத்தில் எமது அரசியல் செயற்பாடுகள் உட்பட எமது மக்களின் நிம்மதியான வாழ்க்கையும் கேள்விக்குறியாக இருந்த ஆட்சியாக அவ்வாட்சி காணப்பட்டது இதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆட்சியினை நாங்கள் மாற்றியமைத்தோம்.

தற்போதைய ஜனாதிபதியின் உயிரை காப்பாற்றியவர்கள் நாங்கள் ஏன் இதைக் கூறுகின்றேன் என்றால் தற்போதைய ஜனாதிபதி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற முன்னரும் வெற்றி பெற்ற பின்னரும் கூட கூறியிருந்தார் நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்காவிட்டால் எனது உயிரினை இழக்கநேரிட்டிருக்கும் அல்லது சிறையில் வாடவேண்டிய நிலை எற்பட்டிருக்கும் எனக்கூறியிருந்தார். இதனை வைத்து பார்க்கும் போது கடந்த ஜனாதிபதி தேர்தலின் வெற்றிக்கு ஆயராது உழைத்து தமிழ் மக்களின் அமோக வாக்குகளால் வெற்றியடைய செய்து தற்போதைய ஜனாதிபதியை உருவாக்கியவர்கள் நாங்கள் எனவே இந்த ஜனாதிபதியின் உயிரையும், சிறைவாசத்திலுருந்தும் காப்பாற்றியவர்கள் நாங்கள் எனவே எங்களுக்கு விசுவாசமாக ஜனாதிபதி அவரகள் செற்பட வேண்டும்.

ஆனால் ஜனாதிபதியின் செயற்பாட்டின் மேல் எமக்கு சந்தேகம் எழம் வண்ணம் அவரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. அதாவது ஊடவியலாளர் லசந்த விக்கிரமசிங்கவின் கொலைக்கு காரணமாக இருந்த இராணுவ அதிகாரி விசாரணையின்றி தடுதடுத்து வைக்கப்பட்டமையிட்டடு கவலையடைந்த ஜனாதிபதி எமது போராளிகள் எவ்விதவிசாரணையும் இன்றி பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை பற்றி ஏன் கவலை கொள்ளவில்லை என்பதில் அவரின் நிலைப்பாட்டில் எமக்கு சந்தேகம் நிலவுக்கின்றது இதனாலையே இந்த நல்லாட்சி அரசின்மீது எமக்கு நம்பிக்கை இழந்து போகின்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார் 

SHARE

Author: verified_user

0 Comments: