யுத்தத்தினால் கணவரை இழந்த குடும்பத்துக்கு தலைமைதாங்கும் ஐந்து பிள்ளைக்கொண்ட குடும்பத்தலைவி ஒருவருக்கே வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் கல்வி நடவடிக்கை, நாளாந்த உணவு, போசாக்கு நிலமைகளை கருத்தில் கொணடு;ம்,.நாளாந்த வருமானத்தைக்கருத்தில் கொண்டுமே சிறிய சில்லறை வியாபாரத்துக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக முனைப்பின் ஸ்ரீலங்காத்தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை காலை தலைவர் மா.சசிகுமார் தலைமையில் வெல்லாவெளியில் நடைபெற்ற நிகழ்வில் முனைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அ. புவனேசராசா,முனைப்பின் ஸ்ரீலங்கா நிருவாக சபை உறுப்பினர்களான ஆ.பிரபாகரன்,ஆர்.திலக்சன் உட்பட பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்
.
உதவித்திட்டம் குறித்து பயனாளி கருத்துத்தெரிவிக்கையில் முதலில் முனைப்பு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.இவ்உதவித்திட்டத்தை நான் சிறந்த முறையில் செயற்படுத்துவதுடன் இதன் ஊடாக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு இதனை சிறந்ந வியாபார நிலையமாக மாற்றியமைக்க முயற்சிப்பேன் என தெரிவித்ததுடன் தன்னைப்போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக படுவான்கரைப்பிரதேசத்தில் பல குடும்பத்தலைவிகள் உள்ளதாகவும் இவர்களின் வாழ்வாதாரத்துக்கு புலம்பெயர்ந்துள்ள நம்மவர்கள் உதவி புரிய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
0 Comments:
Post a Comment