மட்டக்களப்பு மாவட்டம் தேற்றத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சனிக்கிழமை இரவு (29) நடைபெற்ற விசேட பூஜை வழிபாட்டில்
களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் பலர் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
ஆலயத்திற்கு வந்த விசேட அதிரடிப்படையினர் இந்து சமய அனுட்டானங்களை மத்தித்து, ஆலய வளாகத்தை சுற்றி வழிபாடுகளில் ஆடுபட்டதோடு, பூஜைப் பொருட்களையும் ஆலயத்தில் வழங்கிவிட்டு வாழிபாடுகளிலும், ஈடுபட்டனர்.
இந்நிலையில் இவ்விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக மாத்தளை விகாரையிலிருந்து தர்ததத்தன என்ற விகாராதிகதியும் சனிக்கிழமை இரவு கலந்து கொண்டு இந்து சமய அனுஸ்ட்டானங்களில் ஈடுபட்டதோடு, கிரியை நிகழ்வுகளில் கலந்து கொண்டு வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இந்து சமய பாரம்பரியங்களை அறிவதற்காகவும், சமய வழிபாடுகள், கிரியை முறைகளை அறிந்து கொள்வதற்காகவும் மாத்தளையிலிருந்து சகோதர இனத்தைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் வந்துள்ளார். எனவே அவரை மதித்து வரவேற்போம் என தேற்றத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலய பிரதம குரு இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment