மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு விற்பனைக்காக வாகமொன்றில் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகை தேக்கு மரக்குற்றிகளை ஏறாவூர்ப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.மரக்குற்றிகளுடன் வாகனம் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. அவ்வாகனத்தின் சாரதி மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்ஐஎம் றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 26 ஆந்திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.எஸ் ஹேரத் தெரிவித்தார்.
ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை- உப்போடை வயற்பிரதேசத்தினூடாக இம்மரக்குற்றிகளை ஏற்றிய வாகனம் பயணித்தவேளை பொலிஸாரின் வலையில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த இரகசியத் தகவலையடுத்து உதவிப்பொலிஸ் பரிசோதகர்களான எஸ்.பகிரதன் , சியாம் டூள் உள்ளிட்ட குழுவினர் அவ்விடத்திற்குச் சென்றவேளை சந்தேகநபர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment