26 Oct 2016

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் மற்றும் கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது

SHARE
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங்(shelley whiting )மற்றும் கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையில்  சந்திப்பொன்று இடம்பெற்றது
புதன் கிழமை (26) முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் சுகதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் ,கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி மற்றும் மற்றும விவசாயத்துறை அமைச்சர்  கே.துரைராஜசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்

இதன் போது யுத்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் வசிப்பவர்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ,மீள்குடியேற்ற செயற்பாடுகள் மற்றும் அரசியல் யாப்பில் அதிகார பங்கீடு தொடர்பான  கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் யுத்ததால் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்கள்,விதவைகள் மற்றும்  இடம்பெயர்ந்நதவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் இங்கு கனேடிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது
அத்து கிழக்கின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு கனடா உதவிகளை வழங்கி வரும் நிலையில் அதனை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பிலும் இங்கு ஆராய்ப்பட்டுள்ளன.

அத்துடன் பல்லின கலாசாத்தைக் கொண்ட நாடான கனடாவில் அரசியல் யாப்பு ரீதியாக அனைவருக்கும் சமமான அங்கீகாரமும் அதிகாரப் பங்கீடும் இடம்பெற்றுள்ளது.

எனவே இலங்கையில் தற்போது அரசியல் யாப்புத் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதிகாரப் பங்கீடு தொடர்பில் கனடாவின் அனுபவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.


இதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று  மாவட்டங்களிலும் ஆங்கில மொழிக் கற்கை நிலையங்கள் மற்றும்  தகவல் தொழில் நுட்ப நிலையங்களை உருவாக்குவது தொடர்பிலும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளன.




SHARE

Author: verified_user

0 Comments: