8 Oct 2016

அம்கோநிறுவனத்தினால் துறைநீலாவணையில் மாபெரும் சந்தை

SHARE
( துறையூர் தாஸன், இ.சுதா)

துறைநீலாவணை கிராமத்தின் சமூகபொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலை மட்டுப்படுத்தலும் எனும்  திட்டத்திற்கு அமைய அம்கோ நிறுவனமானது மாபெரும் சந்தையையும் களியாட்ட நிகழ்வையும் இன்று மாலை துறைநீலாவணை பொதுமைதானத்தில்ஏற்பாடுசெய்திருந்தது.
இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்கோநிறுவன திட்டமிடல் பணிப்பாளர் பாடசாலைஅதிபர்கள் கிரமான நிலதாரிகள் ஆலயத் தலைவர்கள் எனபலரும் கௌரவ அதிதிகளாககலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அம்கோ நிறுவனமானதுசுய தொழில் இன்றி வறுமையில் இருக்கும் பெண்களின்வாழ்வாதாரத்தைமுன்னெடுத்துச் செல்லும் நோக்குடன் குழுநடைமுறையிலான பலசெயற்பாடுகளை சமூகத்துக்கு செய்து வருகின்றது.

கடந்தஒருவருடகாலமாகஅம்கோநிறுவனத்தினால் இவ் ஊரைபிரதிநிதித்துவப்படுத்தி 29 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுவாழ்வாதரதிட்டத்தை அறிமுகப்படுத்தி சுய வியாபார நோக்கமாக ஊர்களுக்குள் செயற்பட்டுவருகின்றது.

இதன் ஒருஅங்கமாக அம்கோ நிறுவனத்தின் நெறிப்படுத்தலில் துறைநீலாவணைக் கிராமத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 29 குழுக்களும் ஊர்களுக்குள் தாம் செய்துகொண்டிருந்ததைதனக்கெனஒருமாதிரிசந்தையைவடிவமைத்துவியாபாரம் செய்துகொண்டிருக்கின்றது.

மாபெரும் வியாபாரசந்தையானது இன்றும் நாளையும்நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 















SHARE

Author: verified_user

0 Comments: