குறைந்த விலையில் கூடிய பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய சத்தோச விற்பனை நிலையம் கொக்கட்டிச்சோலையில்
வெகு விரைவில் அமைக்கப்படவள்ளதாக கிராமிய பொருளாதார அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலையில் நேற்று(31) புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.
அமைச்சர் அமீர் அலி தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,
கொக்கட்டிச்சோலை பகுதியை விட மோசாமாக காணப்பட்ட ஓட்டமாவடி கிராமம் தற்போது பாரிய மாற்றத்துடன் அழகூட்டப்பட்டு அபிவிருத்தி கண்டிருக்கின்றது. இதற்கு காரணம் அங்கே உள்ள மக்கள் சேமிப்புக்களை மேற்கொள்கின்றனர். ஆனால் தமிழர்கள் உழைக்கும் பகுதியில் பெரும்பான்மையானவற்றை போதைப்பாவனைகளுக்கு செலவு செய்கின்றனர். இவ்வாறான போதைப்பாவனையை தமிழர்களிடமிருந்து இல்லாமல் செய்யும் நோக்குடன் தனது அமைச்சின் ஊடாக பலதொகையான பணத்தினை ஒதுக்கீடு செய்துள்ளாதாகவும் கூறினார்.
0 Comments:
Post a Comment