மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இருக்கின்ற ஆலயங்கள், மன்றங்களுக்கிடையிலான கலை, கலாசாரம், பண்பாடு, விழுமியங்களை பா
துகாத்து மேம்படுத்தும் வகையிலான ஒன்றுகூடல் சனிக்கிழமை (10) மாhலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
கலை, கலாசாரம், பண்பாட்டு, விழுமியங்களை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் க.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை, உதவிப்பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன் மற்றும் பிரதேச ஆலயங்கள், மன்றங்களின் பிரதிநிதிகள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் கலை, கலாசாரம், பண்பாட்டு, விழுமியங்களை மேம்படுத்துவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன.
0 Comments:
Post a Comment