11 Sept 2016

ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை

SHARE
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி முதலாவது ஒழுங்கையில் தாயும் மகளும் வெட்டப்பட்டு
படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (செப்ரெம்பெர் 10, 2016) நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்தி இப்படுகொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நூர்முஹம்மது சித்தி ஜனீரா (வயது 55) மற்றும் அவரது மகளான ஜனீரா பானு மாஹிர் (வயது 34 ) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக தாயும் மகளுமே இந்த வீட்டில் வசித்து வந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்ட ஜனீரா பானுவின் கணவர் தற்சமயம் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் இறங்கிய கொலையாளிகளே இப்படுகொலையைப் புரிந்திருப்பதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருக்கின்றது.

நீதிபதி  ஸ்தலத்திற்கு வரும்வரை எவரும் படுகொலை இடம்பெற்ற வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.










SHARE

Author: verified_user

0 Comments: