கிறிஸ்தவ மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வேதகாமபோட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கும் இந்து மாணவர்களிடையே நடாத்தப்பட்ட மனவளக்கலை பயிற்சியின் பின்னான போட்டியில் வெற்றியீட்டவர்களுக்கும் சான்றிதழ், பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை(09) வேள்ட்விஸன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஆர்.அமுதராஜ் தலைமையில் நடைபெற்றது.
பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட வேள்ட்விஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ மாணவர்களிடையே வேதாகம அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் வேதாகம போட்டியும் இந்து மாணவர்களிடையே மனவளக்கலையை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கை மனவளக்கலை மன்றம், மட்டக்களப்பு அறிவுத்திருக்கோயிலுடன் இணைந்து யோகமும் இளைஞர் வல்லமையும் பயிற்சி பட்டிப்பளைப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது.
வேதகாம பயிற்சி, யோகாப்பயிற்சிகளின் பின்பு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும், பயிற்சியில் கலந்து கொண்டிருந்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், அருட்தந்தை, வேள்ட்விஸன் நிறுவன உத்தியோகத்தர்கள், அதிபர்கள், மனவளக்கலை நிறுவன உத்தியோகத்தர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment