ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புட்ட சான்றுப் பொருட்களை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்குச் சமர்ப்பிக்கவுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை (செப்ரெம்பெர் 23.09.2016) ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் இந்த தடயங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் சான்றுப்படுத்தப்பட்டு அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதேவேளை, ஏறாவூர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுவரும் சந்தேக நபர்கள் ஆறு பேரும் வெள்ளிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment