போக்குவரத்துக்கு இடைஞ்சலாக விபத்துக்களை உண்டுபண்ணும் வகையில் பாதையின் மத்தியில் நிறுவப்பட்டுள்ள
மின்கம்பங்களை அகற்றாவிட்டால் மின்சார சபைக்கெதிராக சட்ட நடவடிக்கை
கிழக்கு முதல்வர் அதிரடி
பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் விபத்துக்களை உண்டுபண்ணும் வகையிலும் பாதையின் மத்தியில் சீரற்ற முறையில் நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்றாவிட்டால் இலங்கை மின்சார சபைக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சகல உள்ளுராட்சி நிருவாகங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது விடயமாக கிழக்கு முதலமைச்சரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@ திட்டமிடப்படாத வகையில் பாதையின் நட்ட நடுவே நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்களால் அந்தப் பாதையை இரவு பகல் நேரங்களில் பயன்படுத்தும் சகலரும் விபத்துக்களைச் சந்திக்க நேரிடுகிறது.
இவ்வாறான மின்கம்பங்கள் ஏறாவூர் நகர சபை நிருவாகப் பிரிவில் உள்ள பல வீதிகளில் சுமார் 30 இற்கு மேற்பட்ட மின்கம்பங்கள் பாதையின் நடுவே காணப்படுகின்றன.
இதனால் வீதிப் பயணிகள், நோயாளிகள் அதிகம் அசௌகரியங்களைச் சந்திக்கிறார்கள்.
ஏறாவூர் ரஹ{மானியா மகா வித்தியாலயத்துக்கு அருகாமையிலுள்ள பெண்சந்தை வீதி நான்காம் குறுக்கு வீதி என்பவை எடுத்துக்காட்டுகளாகும்.
இதனை அகற்றி வீதியோரமாக நடுவதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் இதுவரை பலனளிக்கவில்லை.
இந்த மின்சாரக் கம்பத்தினை பாதையின் மத்தியிலிருந்து அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிப்புரை வழங்குமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதிடம் மக்கள் விடுத்த கோரிக்கையை கவனத்திலெடுத்த முதலமைச்சர் மின்சார சபையின் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு வீதியின் மத்தியில் இருக்கும் மின்கம்பத்தினை உடனடியாக அகற்றுமாறு பணித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது இதுபோன்று பாதையின் நடுவில் நிறுவப்பட்டிருக்கும் ஏனைய சகல மின்கம்பங்களையும் அகற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களும் அதில் கவனம் எடுத்து மின்சார சபைகளின் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும் சகல மின்கம்பங்களையும் அகற்றி பாதை ஓரங்களில் நட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நடவடிக்கைகள் இடம்பெறாதவிடத்து மின்சார சபைக்கு எதிராக உடனடியாக வழக்குத் தொடருமாறும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கு முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் மின்சார அமைச்சருக்கும் மின்சார சபையின் மாவட்ட பொறியியலாளரகள்; மற்றும் சம்மந்தப்பட்ட சகலருக்கும் கடிதம் மூலம் தகவல் அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Comments:
Post a Comment