26 Sept 2016

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

SHARE
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் செவ்வாய்க் கிழமை (27) காலை 8.00 மணிமுதல் “களுவாஞ்சிக்குடி நகரம் ,
பேருந்து தரிப்பிடம் , பொதுச்சந்தை” ஆகிய மேற்குறிப்பிட்ட மூன்று இடங்களில் போதைப்பொருள் பாவனை பற்றிய மக்களுக்கான விழிப்புணர்வுத் திட்டமானது “பூதினமல்” அமைப்பின் மட்டக்களப்புக் கிளையினால் முழுநாள் வேலைத்திட்;டமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
        
இலங்கையில் நாளொன்றிற்கு 60-70 பேர் புகைத்தலினால் உயிரிழக்கின்றனர், அது மட்டுமல்லாமல் தினமும் 14-16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இவ் கொடிய புகைத்தல் பழக்கத்திற்கு உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இக் கொடிய புகைத்தல் பழக்கத்தினை எமது நாட்டில் இருந்து களைந்தெறிவதற்காக ஜனாதிபதியினுடைய“போதைப்பொருள் அற்ற நாடு” எனும் தொனிப்பொருளில் பல நிகழ்ச்சித்திட்டங்கள் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இந் நிகழ்ச்சித்திட்டங்களிற்கு சக்தியூட்டும் முகமாகவும், புகையிலை உற்பத்தி மீதான வரியினை 90 வீதம் உயர்த்தும் ஜனாதிபதியினுடைய குறிக்கோளினை பலப்படுத்தும் முகமாகவும் மேற்குறிப்பிட்ட நிகழ்வினை மேற்கொள்வதற்கு எமது அமைப்பு எதிர்பார்க்கின்றது. எனவே எமது இவ் நிகழ்விற்கான பூரண ஊடக ஒத்துழைப்பினை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என “பூதினமல்” அமைப்பின் மட்டக்களப்புக் கிளையின் இணைப்பாளர் ந.சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார், மேலதிக விபரங்களுக்கு. மேலதிக தொடர்புகளுக்கு:- 0771544193 0772239852,0778849966

SHARE

Author: verified_user

0 Comments: