26 Sept 2016

களுவாஞ்சிகுடியில் பல நெடுங்காலமாக சேதமுற்ற நிலையில் கணப்பட்ட மணல் வீதி புனரமைப்பு

SHARE
களுவாஞ்சிகுடியில் பல நெடுங்காலமாக சேதமுற்று போக்குவரத்து செய்ய நிலையில் கணப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதையான மணல்
வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையிட்டு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்க கொள்வதாக களுவாஞ்சிகுடி அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் கு.கிருபைராஜா  ஞாயிற்றுக் கிழமை (25) தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை, வைத்தியசாலை, பாடசாலை என்பனவற்றிக்கு செல்வதற்காக கூடுதலான மக்கள், மாணவர்கள் பாவிக்கும் இப்பாதை காணப்படுகின்றது வெள்ளகாலங்களில் வீதியில் காணப்படும் பள்ளங்கள் காரணமாக நீர் தேங்கி நின்று நீர் ஓடுவதற்கு இடமின்றி தாழ்கின்ற அபாயமும் ஏற்படுவதுண்டு

இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா அவர்களின் கவனத்திற்கு அப் பிரதேச மக்கள்  கொண்டு வந்திருந்தனர். இதனையடத்து இவ் வீதி அமைக்கப்படுவதன் முக்கியத்துவத்தினை உணர்ந்த கிழக்க மாகாண சபை உறுப்பினர் அவருக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட நிதியில் 48 இலட்சம் ரூபாவினை இவ் வீதிக்கு ஒதுக்கீடு செய்ததனூடாக தற்போது இவ் வீதிக்கான புனரமைப்பு பணிகள் ஆரம் பிக்கப்படுள்ளதாக கு.கிருபைராஜா  மேலும் தெரிவித்தார்.  



SHARE

Author: verified_user

0 Comments: