அனுமதிப்பத்திரம் இன்றி எற்றிச் செல்லப்பபட்ட மாடுகள் ஒரு தொகையை கைப்பற்றியதுடன்
ஏற்றிச் சென்றவர்களையும் ஞாயிற்றுக் கிழமை மாலை (25) கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
போரதீவில் இருந்து மருதமுனைக்கு அறுவைக்காக கொண்ட சென்ற வேளை பட்டிருப்பு பலத்துக்கு அண்மையில் வைத்தே குறித்த மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறிய கென்ரர் ரக வாகனத்தில் கொண்டு செல்லப்ப்பட்ட மாடுகள் வானத்திற்குள் இடவசதியின்றி அவதியுற்ற நிலையில் வாகனத்ததை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தியவேளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் மாடுகள், வாகனம் என்பனவற்னை கைப்பற்றியுள்ளதாகவும், கைது செய்த சந்தேகநபர்கள் நீதிமன்றில் அஐர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக களுவாஞ்சிகுடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment