புத்தளம் மாவட்டத்தில் சிறுபான்மையினராக தமிழர்கள் வாழும் பிரதேசமான முனீஸ்வரம் பகுதியில் தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்கள் தரம் 9 வரை மட்டுமே தமிழ்
மொழிமூலம் கற்கக்கூடிய பாடசாலைகளே காணப்படுகின்றன. இறைமையுள்ள எமது நாட்டில் ஒருவர் தாம் விரும்பும் மொழியைக் கற்கவும், பேசவும் முடியும் என்பது எமது நாட்டின் கௌரவமிகு தனிமனித சுதந்திரமாகும்.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) திங்கட் கிழமை (05) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்விடையம் தொடர்பில் அவர் அனுப்பியுள்ள கடித்ததில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது….
புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழியில் கற்க விரம்பும், பாடசாலை மாணவர்களுக்கு அது எட்டாக் கனியாகவே உள்ளன. இதற்குக் காரணம் ஆரம்பக் கல்வியை தமிழ் மொழி மூலம் கற்றுவிட்டு, இரண்டாம் நிலைக் கல்வியை சகோதர மொழியிலோ, அல்லது சர்வதேச மொழியிலோ கற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் அம்மாணவர்கள், தள்ளப்படுகின்றனர்.
இவை சாதாரண ஒரு விடையமல்ல இதனால் புத்தளம் மாடவட்டத்தில் தமிழ் மொழிமூலம், கல்வி கற்கும் மாணவர்கள் பிற மொழியில் ஆரம்பக் கல்வியை கல்லாமையினால் இரண்டாம் நிலைக் கல்வியைக் கற்கும்போது பாரிய மொழிப்பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். இதனால் அவர்களது எதிர்கால வாழ்வை இடைநடுவே கலைத்து விடுகின்றனர். இலவசக் கல்வி என்பது பத்தளம் மாவட்ட முனீஸ்வரம் பிரதேச தமிழ் மொழிமூல இரண்டாம் நிலை கல்வி கற்க விதிவிலக்கானவையா.
கௌரவ மேன்மை மிகு ஜனாதிபதி அவர்களே! புத்தளம் மாவட்டத்தின் தமிழ் மக்கள் அல்லது தமிழ் பேசும் மக்கள் கல்வி சம்மந்தமாக இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் பல இன்னல்களை என்னிடத்திலும் மேலும் பல இடத்திலும், எடுத்து வைத்துள்ளார்கள். என்பதை இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
புத்தளம் முனீஸ்வரம் பகுதியில் தமிழ் கற்பிக்கின்ற பாடசாலைகள் 9 ஆம் தரத்திற்குமேல் இல்லை எனவும், அதனால் கல்வியை தமிழில் தொடர முடியாத சூழ்நிலை இருப்பதனால் இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழிமூலம் கல்வியைத் தொடர முடியாதுள்ளன. அதன்பால் இடைநடுவில் இடைவிலகல் ஏற்படுவதை பெற்றோராலும், வேறு யாராலும் தடுக்க முடியாதுள்ளன என்பதை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.
இந்த துன்பகரமான செயலால் சிறுவயத்தில் மதுபோதைக்கு அடிமையாவதும், இளவயது திருமணமும், நாட்டுக்கும் நாட்டு அரசாங்கத்திற்கும் அபகீர்த்தி உருவாகும் சூழ்நிலையை இந்த நல்லாட்சி அரசாங்கம் அம்மக்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு நல்ல நடவடிக்கை விரைவாக எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நான் தங்களுக்கு இக்கடிதம் அனுப்புகின்றேன். என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment