மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மாங்காடு கிரமத்திற்குப் பெறுப்பான
வாழ்வின் எழுச்சித்திட்ட உத்தியோகத்தர் மீதே இத் தாக்குதல் வியாழக் கிழமை மாலை (04) நடாத்தப்பட்டுள்ளது.
தாக்கதலுக்குள்ளான உத்தியோகத்தரிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாகவே மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும், அவரை நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
வாழ்வின் எழுச்சித்திட்டத்தினூடாக சுயதொழிலுக்காக வழங்கப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரத்தினை பயனாளி ஒருவர் விற்பனை செய்திருந்தார் இதனை அறிந்து நாங்கள் விசாரணையை நடாத்தி குறித்த இயந்திரம் விற்பனை செய்யப்பட்ட இடத்தினையும் அறிந்து கொண்டு பயனாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியிருந்தோம்.
இதன் பின்னர் குறித்த இயந்திரத்தினை மீழப் பெற்றுள்ளதாகவும் அதனை நேரில் சென்று பார்வையிடும்படி பயனாளி கோரியிருந்தார். இதற்கமைவாக எமது உத்தியோகத்தர் பார்வையிடச் சென்றிருந்த வேளையிலையே, உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளததக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு பொறுப்பான வாழ்வின் எழுச்சித்திட்ட முகாமைத்துவ பணிப்பாளர வி.வரதராஜன்; இச்சம்பவம் தொடர்பில் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment