அரசாங்கத்தை நாம் பயன்படுத்தி உதவிகளைப் பெற்று எந்தளவிற்கு எமது பகுதிகளை அபிவிருத்தி செய்யமுயுமோ அவற்றைச் செய்வதற்குத் நாம் தயாராகவுள்ளோம். ஆன்மீகம் வளர்க்கப்பட வேண்டும் அதுபோல்
எமது மக்களின் வாழ்வாதாரமும் வளர்க்கப்பட வேண்டும். இதற்காக வேண்டி கிழக்கு மாகாண சபையையும். மத்திய அரசாங்கத்தையும் எமது மக்கள் நன்கு பயன்படுத்தி அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டியது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் ஆனால் அது தவறுதவாக கைமாறிவிட்டது. ஆனாலும் தற்போது கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக்கட்சியாகவிருந்து 2 அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரின் 1.47 மில்லியன் ரூபாய் செலவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்களுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) மாலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதப்போது கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கiயிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
மட்டக்களப்பு மாட்டத்தில்தான் விவசாயம், மீன்பிடி, கால்நடை, உணவு பாதுகாப்பு, கூட்டுறவு போன்றவற்றை உள்ளடக்கிய கிழக்கு மாகாண அமைச்சர் இருக்கின்றார். அவர் எமது கட்சியைத் சேர்ந்தவர் அவ்வமைச்சுக்களுக்குப் பொறுப்பாகவிருக்கின்ற அமைச்சர் கி.துரைசாரசிங்கம் அவர்களைப் பயன்படுத்தி நமது மக்கள் நன்கு முன்னேற்றமடைய வேண்டும், எமது மக்கள் அவரை உசார்ப்படுத்த வேண்டும். இல்விட்டால் அவரும் பேசாமல் இருந்துவிடுவார்.
அதுபோல் கல்வி, விளையாட்டு, மீள்குடியோற்றம் உள்ளடக்கிய அமைச்சும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமை;பின் வசம்தான் உள்ளது. அவ்வமைச்சுக்களை வைத்திரு;ககின்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி அவர்களையும் எமது மக்கள் நன்கு பயன்படுத்தி முன்னேற்றிக் கொள்ள வேண்டும்.
பொதுவாக சில அரசியல்வாதிகள் அவர்களின் அரசியலைத் தக்கவைப்பதற்காக அவர்களுக்கு வேண்டியவர்களை மையப்படுத்தியே வேலைத் திட்டங்களை மேற்கொள்வார்கள். அது ஒரே கட்சியாக இருந்தாலும் இவ்வாறுதான் நடைபெறும். கிராமங்களிலுள்ள பல தேவைகளை மாகாணசபைமூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஒருசில அதிகாரங்கள் மாகாண சபைக்கு கொடுக்காமலிருந்தாலும், மாகாணசபைக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. அதனைப ;பயன்படுத்தி மக்களின் தேவைகளை மாகாணசபை நிவர்த்தி செய்ய வேண்டும். மத்திய அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர் கட்சியாக இருந்தலும் அவர்களிடம் வாதிட்டு மக்களின் தேவைகள் சிலவற்றை நிவர்த்தி செய்து வருகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதி அபிவிருதியிலே பாரிய பின்னடைவை எதிர் கொண்டிருக்கின்றது. ஆனாலும் நாம் அதனை அப்படியே விட்டு விடமாட்டோம். எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளத் தாயாராகவிருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்டுத்தப்பட்ட நிதியில் வழங்கப்பட்டுவரும் சிறு உதவிகள் மக்களுக்கு போதாது. இருந்த போதிலும் எம்மால் முடிந்த உதவிகளை மேற்கொள்ள நாம் பின்னிற்றப் போவதில்லை.
மேலும் இப்பகுதியிலுள்ள பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள், மற்றும் பொது அமைப்புக்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்று அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்கக் காத்திருக்கிளன்றோம். எனவே மக்களின் கோரிக்கைகளை எமக்குச் சமர்ப்பிக்குமறூ கேட்டுக் கொள்கின்றேன்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குரிய கட்டடவசதி போதாமலுள்ளது இதற்காக வேண்டி 12 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டடம் அமைப்பதற்கு இப்பிரதேச செயலாளர் உரிய அமைச்சிற்கு விண்ணப்பித்துள்ளார்கள் மிகவிரைவில் சம்மந்தப்பட்ட அமைச்சரை நேரில் சந்தித்து இவ்விடையம் தொடர்பில் உரையாடி அக்கட்டடத்தை பெற்றுத்ததுவதற்கு துரித நடவடிக்ககை எடுப்பேன்.
இப்பிரதேசம் பரப்பளவில் கூடிய பிரதேசமாகும் இப்பிரதேசம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும், அல்லது இப்பகுதி நகரசபையாக மாற்றப்பட வேண்டும். இப்பிரதேசத்தில் புணரமைப்பின்றிக்; காணப்படுகின்ற வீதிகளை மக்கள் அடையாளம் காட்டி எமக்கு அனுப்பிவைத்தால் அவற்றை நாம் சம்மந்தப்பட்டவர்களோடு கதைத்து புணரமைப்புச் செய்தற்கு நடவடிக்கை எடுப்போம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில மதுபானசாலைகளை நாங்கள் நிறுத்த முற்படும்போது எங்கள் வீடுகளுக்கு லெச்சக்கணக்கில் பணங்கள் வருகின்றன. அனைத்து மதுபானசாலைகளிலும் நாம் கைவைத்தால் கோடீஸ்வரராகிவிடலாம் அந்த அந்த அளவிற்கு இலஞ்சம் மலிந்துபோய்க் கிடக்கின்றன.
எனவே அரசியல்வாதிகளாக இருந்தலும்சரி அதிகாரிகளாக இருந்தாலும் சரிய யாராவது இலஞ்சம் பெற்றால் பொதுமக்கள் அவற்றை வெளிக்கொணர வேண்டும். அரசியலுக்குள் வருபவர்கள் உழைத்து சம்பாதிக்கலாம் என்ற நோக்குடன் வரக்கூடாது. என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment