வலது குறைந்தோர் என்போர் உடலில் மட்டும்தான் இவர்கள் வலது குறைந்தவர்கள் மனதில் வலது குறைந்தவர்கள் அல்ல ஏனென்றால் நம்மால் எதுவும் முடியாது என்று நினைக்காமல் ஒரே இடத்தில் இருந்து சோர்ந்து போகாமல்
சிறுகடைகள், விவசாயம், தொலைபோசி திருத்துதல், ஆடு மாடு வளர்ப்பு, போன்ற தொழில்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்கள்பபு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
கிரான் பிரதேசத்தில் வியாழக் கிழமை (04) புதியபாதை எனும் வலது குறைந்தோருக்கான அமைப்பின் ஒன்றுகூடல் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர்களை நான் உளமாரப் பாராட்டுகின்றேன். இவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதை நாம் அறிகின்றோம் இவ்வாறான பிரச்சனைகளுக்கு என்னால் இயலுமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்வேன் என அவர் இதன்;போது மேலும் தெரிவித்தார்.
கிரான் பிரதேசத்தில் 380 வலது குறைந்தேர் காணப்படுகின்றார்கள் ஆனால் இப்பிரதேசத்தில் இயங்கிவரும் வலது குறைந்தோருக்கான புதிய பாதை அமைப்பில் 190 பேர் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment