16 Aug 2016

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒட்டமாவடி தேசிய பாடசாலைக்கு 85 மில்லியன் ரூபாய்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
1917 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலை இந்த பிரதேசத்தில் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சிறப்பான முறையில்  கல்வியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப்பாடசாலையில் கற்றவர்கள் பல்வேறு துறைகளிலும் உயர்பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள். எதிர்வரும் 2017 ஆம் ஆண்டில் தனது நூறு ஆண்டுகள் வரலாற்றை பதிகின்றது ஓட்டமாவடி தேசிய பாடசாலை.

இப்பாடசாலையின் பழைய மாணவன் என்ற ரீதியிலும்,பிரதேசத்தில் மிகச்சிறந்த கல்விக்கூடம் என்ற வகையிலும் கடந்த காலங்களில் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களினால் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் இப்பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் ஒட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்ககல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவச ஆகியோருடன் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் 12.08.2016  அன்று ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா பற்றிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது அன்றைய தினமே  பாடசாலையின் எஞ்சிய அபிவிருத்திப்பணிக்கு 85  மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது செய்யப்பட்டது.

இதன் பிரகாரம் இந்த நிதியானது உள்ளக  அரங்குக்காக 50 மில்லியனும்,விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதோடு புதிய பார்வையாளர்  அரங்குக்காக 35 மில்லியனும் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 இதனை தொடர்ந்து 13.08.2016 அன்று  பிரதி அமைச்சர் தேசிய பாடசாலைக்கு சென்று பணிகளை மேற்கொள்ள சரியான இடங்களை பார்வையிட்டதோடு அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை  அபிவிருத்தி குழு , பாடசாலை பழைய மாணவர் சங்கம்  ஆகியோருடன் கலந்துரையாடி வேலைகளை துரிதப்படுத்துமாறு கேட்டுகொண்டார்.

மேற்படி வேலைத்திட்டமானது  துரிதமாக மேற்கொள்ளும் வகையில் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பிரதியமைச்சரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பத்து நாட்களுக்குள் திட்ட  அறிக்கையை பெற்றுக் கொள்ள ஆவன செய்யுமாறும் பிரதி அமைச்சர் ஆலோசனை வழங்கினார். பிரதியமைச்சர் அமீர் அலியின் இந்த அதிரடி நடவடிக்கையால் கல்குடா சமூகம் அவருக்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறது.
SHARE

Author: verified_user

0 Comments: