16 Aug 2016

வீதி புனரமைப்பு திட்டம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைப்பு

SHARE
உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் சுமார் 40 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிய காத்தான்குடி விடுதி வீதிக்கான தார் அட்டு செப்பனிடும் வேலைத்திட்டப் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு  
மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

முன்னால் மாகாணசபை உறுப்பினர் பரீட் ஜே.பி. தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன், காத்தான்குடி நகர சபையின் முன்னால் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஜே.பி. மற்றும் ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சியின் அமைப்பாளர் உட்பட குவைத், சஊதி அரேபியா மற்றும் அல்ஜிரியா நாட்டின் உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: