9 Aug 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்நீர் மீன் உற்பத்தின் ஊடாக 1521 மெற்றிக் தொன் மீனை உற்பத்தி.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்நீர் மீன் உற்பத்தின் ஊடாக 1521 மெற்றிக் தொன் மீனை உற்பத்தி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்நீர் மீன் உற்பத்தின் ஊடாக 1521 மெற்றிக் தொன் மீனை உற்பத்தி செய்துள்ளோம்,
இதுகடந்தகாலங்களைவிட முன்னேற்றம் அடைந்துள்ளது என நன்னீர் உயிரியல்வள அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட விரிவாக்கல் உத்தியோகத்தர். ஜே.நெல்சன் தெரிவித்தார்.

தும்பங்கேணி வளர்பிறை மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் திங்கட் கிழமை (09) இடம் பெற்ற நன்னீர் மீன் உற்பத்தி அறுபடை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்னீர் மீன் உற்பத்தி என்பது பாரிய பிரச்சினையாகவுள்ளது. 40 வீதமான மீன் குஞ்சுகளையே தேசிய நீரியல் உயிரின அபிவிருத்தி சபையின் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஏனை 60 வீதமான மீன் குஞ்சுகள் திட்டங்கள் ஊடாகவே பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இருந்த போதும்  மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தளவில் நன்னீர் மீன் வழப்பு அறுவடை எங்களுக்கு வெற்றியளித்துள்ளது.

அதாவது கடந்த காலங்களில் வருடம் ஒன்றிக்கு 650 தொடக்கம் 700 மெற்றிக் தொன் மீன் உற்பத்திய மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் சென்ற  ஆண்டு 1521 மெற்றிக் தொன் மீன் உற்பத்தியினை எங்களால் மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது இது நன்னீர் மீன் உற்பத்தியில் பாரிய மாற்றமாகும்.

மாவட்டத்தினப் பொறுத்தளவில் 22 குளங்கிளிலே குறித்த மீன் உற்பத்தியினை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வருடம் இக்குளங்களில் 3.4 மில்லியன் மீன் குஞ்சுகளை விட்டிருக்கின்றோம். வருங்காலங்களில் மீன் குஞ்சுகளை கூடதலாக விடுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம் இருந்தும் குளங்களின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டால் மாத்திரமே இது சாத்தியமாகும். இது மாத்திரமின்றி  மாகாண அமைச்சின் ஊடாக வழங்கப்படும் மீன் குஞ்சுகளின் தொகையினை அதிகரிப்பதன் ஊடாக ஒத்துழைப்பினை நாங்கள் எதிர்பார்;கின்றோம். இவை அனைத்தும் கிடைக்கின்ற பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்னீர் மின்வளர்ப்பின் ஊடாக பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்தார். 


SHARE

Author: verified_user

0 Comments: