17 Jul 2016

போஷாக்கு விழிப்புணர்வு

SHARE

தேசிய போஷாக்கு மாத நிகழ்வுகளை சிறப்பிக்கும் முகமாக ஏறாவூரில் “ஆரோக்கியமான உடலமைப்பிற்கு அளவோடு உண்ணுங்கள்”
என்ற தொனிப்பொருளில் போஷாக்கு விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.

சுகாதர வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபை அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல மருத்துவ மாதுக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையச் சந்தியிலிருந்து புன்னைக்குடா வீதி வழியாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை வரை இந்த போஷாக்கு விழிப்புணர்வு ஊர்வலம் கால்நடையாக இடம்பெற்றது.




SHARE

Author: verified_user

0 Comments: