26 Jul 2016

விளையாட்டின் மூலம் ஒன்றுபடுவோம் சிறிநேசன் எம்.பி.

SHARE
நாடாளுமன்றஉறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மண்முனைப் பற்று, ஆரையம்பதி பிரதேசத்திற்குற்பட்ட விளையாட்டுக்
கழகங்களுக்கென கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கும் வைபவம் சனிக்கிழமை (23) மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்றஉறுப்பினர்…..

கிராமமொன்றின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவது விளையாட்டு கிராமப் புறங்களிலேயே மிகவும் திறமைவாய்ந்த விளையாட்டுவீரர்கள் உள்ளனர் அவர்களது திறமைகளை வெளிக்காட்ட பொருத்தமான முறைகளில் எமது பிரதேசங்களில் விளையாட்டுத்துறையினை அபிவிருத்தி செய்யவேண்டும்.

அண்மையில் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பிற்கு வருகைதந்திருந்தபோது அவருடன் வருகைதந்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படுவான்கரைப் பிரதேசத்தில் மூன்று விளையாட்டு மைதானங்களைப் புனரமைத்து அபிவிருத்தி செய்யஏற்றுக் கொண்டதோடு மறுநாளே தனது அமைச்சின் பொறியியலாளரை மகிழடித்தீவு, நாவற்காடு, இலுப்பட்டிச்சேனை போன்ற இடங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்கு அனுப்பி ஆரம்பகட்ட மதிப்பீடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில், மேற்படி மூன்று மைதானங்களும் விரைவில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

மேலும் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள பாடசாலைகளை பிரதேச மக்கள் யாவரும் இணைந்து அபிவிருத்தி செய்வதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு நகரப் பாடசாலைகளில் இடம் தேடி அலைவதை நிறுத்தமுடியும், எதிர்க்காலத் தேவை அதுவே, எதிர்காலத்தில் இப்பிரதேசத்தின் கல்வி, விளையாட்டு மற்றும் கலாசார செயற்பாடுகளை வலுவூட்ட தமது பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் பிரதேசசெயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், அலுவல உத்தியோகத்தரகள் மற்றும் விளையாட்டுக் கழகஉறுப்பினர்கள்; என பலர் கலந்து கொண்டிருந்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: