7 Jun 2016

வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான காடழிப்புக்கள் நடைபெறுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட வனபரிபாலன உத்தியோகத்தர் ஐனாப் நவீஸ் அவர்கள் தெரிவித்தார்.

SHARE
இலங்கையில் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான காடழிப்புக்கள் நடைபெறுகின்றது தற்போதைய கால கட்டத்தில் இது ஆரோக்கியமான விடயம் அல்ல என மட்டக்களப்பு மாவட்ட வனபரிபாலன உத்தியோகத்தர் ஐனாப் நவீஸ் அவர்கள் தெரிவித்தார்.
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு வெல்லாவெளி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இலங்கையில் 1900 ஆண்டு 84 வீதமான காடுகள் காணப்பட்டன அது 1984 ஆண்டு  44 வீதமாக குறைவடைந்தது 2002 ஆண்டு 22 வீதமாக குறைவடைந்துள்ளது இன்று அது 18 வீதமாக குறைவடைந்துள்ளது. வடக்கு கிழக்கில் அதிமான காடுகள் காணப்படுகின்றது இத ஆரோக்கியமான தொன்றாகும் இருந்தும் இன்று வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான காடழிப்புக்கள் நடைபெறுகின்றது தற்போதைய கால கட்டத்தில் இது ஆரோக்கியமான விடயம் அல்ல

உலகில் இன்று போதைவஸ்து கடத்தலுக்கு அடுத்ததாக வனஜீவராசிகளே கடத்தப்படுகின்றன. கடந்த அரசாங்கத்தின் 360 யானைத்தந்தங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கைப்பபற்றப்பட்டது. அதனை ஆலயங்களில் காட்சிபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.ஆனால் இந்த அரசாங்கம் அதனை நிறுத்தி ஆலயங்களில் காட்சி படுத்துவதன் ஊடாக இவ்வாறான பொருட்களில் மக்கள் ஆசை கொண்டு மீண்டும் கடத்தலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாகிவிடும் என அதனை தவித்துக் கொண்டனர்.

இவை போன்ற நல்ல காரியங்களால் வனஜீவராசிகளின் சட்டவிரோத கடத்தல்களை தடுப்பதற்கு முடிகின்றது. ஆனாலும் உலகில் இன்று மருத்துவத் தேவைகளுக்காக 20 பில்லியன் பெறுமதியான ஜீவராசிகள் அழிக்கப்படுவதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கையினைப் பொறுத்தளவில் பாரியளவில் வனவராசிகள் கடத்தல்கள் இடம்பெறாவிட்டாலும் கூட இன்று முன்னர் பத்தாயிரம் யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டிருந்தது தற்போதைய கணக்கீட்டின் படி அது ஜந்தாயிரமாக குறைந்துள்ளது, கடுகள் அழிக்கப்படுவதனாலையே யானைகள் மக்களின் வாழ்விடங்களை நோக்கி வருகின்றது. இந்த வகையில்; வனஜீவராசிகள் அழிக்கப்படுவதனை குறைப்பதற்காக பலதரப்பட்ட செயற் திட்டங்கள் அரசினால் முன்னெடுக்கப்படுகின்றன உதாரணமாக மனிதனை கொன்றல் அதிலிருந்து மீழலாம் ஒரு யானையை கொன்றால் மீழ்வதென்பது கடினமான அளவுக்கு சட்டம் இலங்கையில் காணப்படுகின்றது.


















SHARE

Author: verified_user

0 Comments: