20 Jun 2016

தொல்பொருட் பொக்கிஷங்களை பதுக்கி வைத்திருந்த நால்வருக்கும் விளக்கமறியல்

SHARE
விலை மதிப்பிட முடியாத புராதன மன்னர்கள் காலத்து தொல்பொருட் பொக்கிஷங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் ஏறாவூரில் கைது செய்யப்பட்ட ஏறாவூர் நகர் மற்றும் மிச்நகர் பகுதிகளைச் சேர்ந்த நால்வருக்கும்
விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பிராந்திய புலனாய்வுப் பொலிஸார் மற்றும் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி ஏறாவூர் மிச்நகர் பகுதியில் சனிக்கிழமை இரவு (ஜுன் 18, 2016) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அவ்வேளையில் புராதன காலத்து மன்னர்கள் பாவித்த விலை மதிப்பிட முடியாத தொல்பொருட் பொக்கிஷப் பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சந்தேக நபர்களை ஏறாவூர் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 19, 2016) ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ். தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபர்களுக்கு ஜுன் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் வசமிருந்த தொல்பொருட் பொக்கிஷங்கள் வவுனியா பிரதேசத்திலிருந்து வேறு இடங்களுக்கு கடல் மார்க்கமாக கடத்தப்படுவதற்காக ஏறாவூருக்குக் கொண்டு வந்து மிக இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்படிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புலனாய்வுப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: